தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கத் தீர்மானம்: விதிகளின் படி பரிசீலிக்கப்படும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தகவல்!

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, அக்.23 தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மீண்டும் நாடாளுமன்றத்தில் பதவி நீக்க  தீர்மானம் கொண்டு வர ஆலோசித்து வரும் நிலையில், அது குறித்து மக்களவைத் தலைவர்   ஓம் பிர்லா முக்கிய கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை மக்கள வைத் தலைவர்  ஓம் பிர்லா, “தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி புதிய நோட் டீசுகள் ஏதேனும் வந்தால், நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே அவற்றை முழுமையாக ஆராய்ந்து தகுந்த முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். இதற்கிடையே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அமைச்சரவை செயலகம் அளித்துள்ள பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள தாவது தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் அளித்த புகார் மீது அமைச்சரவை செயலாளர் டி.வி.சோமநாதன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒட்டுமொத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது பரிந்துரை ஏதும் இல்லாத நிலையில், இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுப்பது பொருத்தமற்றதாக இருக்கும் என்று அமைச்சரவைச் செயலகம் கருதியதாக அந்த ஆர்டிஅய் பதிலில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் நகர்வுகள் மற்றும் தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் இந்த உட்கட்சி மோதல் விவகாரங்கள் தற்போதைய தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *