மகளிர் இடஒதுக்கீட்டை இப்போதே அமல்படுத்தத் தயங்குகிறது பா.ஜ.க. பிரதமர் மோடிமீது கார்கே குற்றச்சாட்டு

1 Min Read
- Advertisement -

கலபுரகி, அக்.23- மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார். தொகுதி மறுவரையறைக்காக காத்திருக்காமலேயே 33 சதவீத இடஒதுக்கீட்டை அரசாங்கத்தால் அமல்படுத்த முடியும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கருநாடகாவின் கலபுரகி நகரில் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “மகளிர் இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசால் இப்போதே அமல்படுத்த முடியும். நாடாளுமன்றத்தின் தற் போதைய பலம் மற்றும் தற்போதைய தொகுதி அமைப்பின் அடிப்படையில் அந்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்கலாம். ஆனால், பிரதமர் மோடியை தடுப்பது எது?

எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தும் நோக்கில் இந்த விவகாரத்தை அரசாங்கம் அரசியலாக்குகிறது. மற்றவர்களை அவதூறு செய்யவும், எதிர்க்கட்சிகளை களங்கப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் ஒரு தந்திரம் மட்டுமே இது.

இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முன்பே முயன்றவர்கள் நாங்கள். அவ்வாறு இருக்க நாங்கள் ஏன் எதிர்க்கப் போகிறோம். இது பிரதமர் மோடியின் மற்றொரு தந்திரம். பொய்களைக் கூறி பொதுமக்களை ஏமாற்றி, தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அவர் முயல்கிறார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர் பான எந்தவொரு அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் கொண்டு வருவதற்கு முன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று நான் ஏப்ரல் 11, 2026-இல் பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தேன். ஆனால், எனது கோரிக்கையை பிரதமர் ஏற்கவில்லை. பிறகு, ஏப்ரல் 14-ஆம் தேதி அந்த மசோதா பொதுவெளியில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 17-இல் அந்த மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது.

அதன்பிறகு ஜூலை 16-ஆம் தேதியும், ஆகஸ்ட் 27-ஆம் தேதியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன்.

இப்போது நான்காவது முறையாக மீண்டும் அதே கோரிக்கையை நான் முன் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *