எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர் ஆறு நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு

2 Min Read

காத்மண்டு, ஜூன் 5– எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன வழிகாட்டி ஒருவர், உணவு,தண்ணீர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் இன்றி, 6 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி யடையச் செய்துள்ளது.

தவா ஷெர்பா என்ற வழிகாட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவருடன் இணைந்து 29,032 அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைய முயன்று, அது தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் கீழே திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கேம்ப் 3 மற்றும் கேம்ப் 4 ஆகிய பகுதிகளுக்கு இடையே தவா ஷெர்பா திடீரென காணாமல் போனார்.

அவர் கடைசியாக மே 29ஆம் தேதியன்று பார்க்கப்பட்டார். அவரு டன் சென்ற மலையேற்ற வீரர் முகாமிற்கு திரும்பிய நிலையில், தவா அங்கு வந்து சேரவில்லை. பெரும் பாலான மலையேற்ற வீரர்கள் மலையை விட்டு வெளியேறிவிட்டதால், அவர் உயிருடன் திரும்பு வார் என்ற நம்பிக்கையை மக்கள் இழக்கத் தொடங் கினர்.

ஆரம்பக்கட்ட தேடுதல் முயற்சிகளில் அந்த வழிகாட்டியப் பற்றிய எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை. இதனால் தவா ஷெர்பா இறந்துவிட்டதாக உறுதியாக நம்பிய அவரது குடும்பத்தினர், அவருக்கான பாரம்பரிய இறுதி நிகழ்வுகளைச் செய்யத் தொடங்கினர்.

இந்த சூழலில், எவரெஸ்ட்டின் கீழ் சரிவுகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினர், ஆபத்தான கும்பு பனிப்பாறைபகுதிக்கு மேலே பனியில் ஒரு மனித உருவம் சிரமப் பட்டு நகர்வதைக் கண் டுள்ளனர். பின்னர், அது ஷெர்பா என்பதை உணர்ந்த அவர்கள், கடுமையான சோர்வு, காயங்களுடன் இருந்த அவரை, மலையிலிருந்து கீழே கொண்டு வந்த னர். அவர் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவிற்கு அழைத் துச் செல்லப்பட்டார்.

இது குறித்து நேபாள மவுண்ட் எவரெஸ்ட் ஹைக்கிங் நிறுவனம் வெளியிட்ட பதிவில், ‘உணவு, தண்ணீர் அல்லது கூடுதல் ஆக்ஸிஜன் ஏதுமின்றி, ஆபத்தான கும்பு பனிப்பாறைப் பகுதியைத் தனியாகக் கடந்து தவா கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்தும் உயிர் பிழைத்துள்ளார் என்பது இது ஒரு பெரும் வியப்பைத் தந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *