பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி குருதிக் கொடை வழங்கியதற்கு பாராட்டுச் சான்றிதழ், நினைவுப்பரிசு

1 Min Read
- Advertisement -

வல்லம், அக். 23- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மிகச் சிறப்பாக செயல்படும் நாட்டு நலப்பணித்திட்டம் வாயிலாக கிராமப்புற மக்களுக்கு சேவை செய்தல், மரக்கன்றுகள் நடுதல், குருதிக் கொடை முகாம் நடத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.

2025-2026ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட அரசு குருதி மய்யங்களுக்கு குருதிக்கொடை முகாம்கள் வாயிலாக குருதி மருத்துவ பயனாளிகளின் வாழ்வை ஒளிரச் செய்ததற்காக வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் செயல்பாடுகளை பெரு மைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்றுச் சங்கமும் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்க பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலு வலர்கள் ஞா.செங்கொடி, ரெ.நடராஜன் மற்றும் பெ.மாதவன்  ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *