பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியின் 47-ஆம் ஆண்டு விழா

- Advertisement -

புத்தகங்கள், நாளிதழ்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!
முன்னாள் மாணவர் என். கேசவராஜ் உரை

பெரியார் கல்வி நிறுவனங்கள் பெரியார் கல்வி நிறுவனங்கள்

திருச்சி, அக்.18 திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 47ஆம்  ஆண்டு விழா 16.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு, வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

பகுத்தறிவுச் சிந்தனையாலும், அறிவுச் சுடராலும் ஒளிவீசும் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இவ்வாண்டு விழாவிற்கு, பெரியார் கல்விக் குழுமங்களின் தாளாளர் முனைவர் வீ. அன்புராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும்,  தற்போது   தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (TNPL) நிறுவனத்தின் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவருமான  என். கேசவராஜ்  சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விழாவின் தொடக்கமாக மொழி வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து வருகை தந்தவர்களை வரவேற்கும் விதமாக மாணவிகளின் வரவேற்பு நடனமும் இடம்பெற்றன.  பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவி அ.ஏஞ்சலினா கிருஸ்டி  வரவேற்புரை வழங்கி நிகழ்விற்கு வருகை தந்தோரை வரவேற்றார்.

பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா  விதைத்த விதைகள் விருட்சமாய் மாறிய விதத்தையும், சவால்களைச் சாதனைகளாய் மாற்றிய  ஓராண்டுப் பயணத்தின் மைல்கற் களையும் பட்டியலிட்டு, கடந்து வந்த பாதை யின் உயரங்களையும்,  மாணவர்களின் அசாத் திய திறமைகளையும் ஒருசேர  விவரித்து    2025-2026ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டறிக் கையை வாசித்து மாணவர்களின் சாதனைகளைப் பறைசாற்றினார்.

“அலைபேசி நம் அடிமை; நாம் அலைபேசிக்கு அடிமை இல்லை!” என்ற கருத்தை வலியுறுத்தும் தமிழ் நாடகமும், “மதிப்பெண்கள் மட்டுமே மனிதனின் முழு வாழ்க்கையையும் தீர்மானித்து விடுவதில்லை” என்ற வாழ்வியல் உண்மையை உணர்த்தும் ஆங்கில நாடகமும் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தன.

பெரியார் கல்வி நிறுவனங்கள் பெரியார் கல்வி நிறுவனங்கள்

பெரியார் கல்வி நிறுவனங்கள்

கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு களில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், மழலையர் பிரிவு முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற 107 மாணவர்களுக்கும்,  முழு வருகைப் பதிவு பெற்ற 39 மாணவர்களுக்கும், பரிசுகளும் ,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நூறு சதவிகித தேர்ச்சி வழங்கிய ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசுகளும், தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

தேசிய மாணவர் படையின் (NCC) சிறப்பான மாணவர்களான கே.பிரதீப் குமார், பி.சாந்தினி, பி.கமலேஷ் கண்ணன் ஆகியோரின் பெற் றோர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பிக் கப்பட்டனர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்  என். கேசவராஜ்  சிறப்புரை யில் மாணவர்களுக்குப் பல பொன்னான வழிகாட்டுதல்களை வழங்கினார். ‘‘வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழுங்கள், ஆனால் தடம் மாறிவிடாதீர்கள். பெற்றோர்களே, மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யுங்கள். அடிப்படைக் கல்விக்கு முக்கி யத்துவம் கொடுங்கள் வாசிப்புப் பழக்கம், புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களைப் படிப் பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், உடல் நலனைப் பேணும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள், மற்றும் விளை யாட்டுத் துறையிலும் முத்திரை பதியுங்கள்’’ என்று மாணவர்களை ஊக்கப்படுத்தி அறிவுரைகளை வழங்கினார்.

பள்ளித் தாளாளர் முனைவர் வீ.அன்புராஜ் தன் தலைமையுரையில் நேர மேலாண்மை, விட்டுக் கொடுக்கும் பண்பு, சமயோசிதமாகச் செயல்படும் தன்மை ஆகியவற்றைக் கற்றுத் தரும் பள்ளியாகவும் நமது பள்ளித் திகழ்வதாகப் பெருமிதத்துடன் கூறி முதல்வர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்களுக்குத்  தன் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்வு சிறப்பாக நடைபெறப் பக்கபலமாய் நின்ற அனைவருக்கும் நன்றியுரை கூறி, இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் பள்ளியின் முதுகலை கணினி ஆசிரியருமான  பி. மைக்கிளின் வனிதா நன்றியுரை வழங்க, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *