பெங்களூர், அக். 22 கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா பகுதியில் நடைபெற்ற தசரா ஊர்வலத்தின் போது, 650 கிலோ எடையுள்ள வெள்ளி அம்பாரியைச் சுமந்து சென்ற யானை திடீரென மிரண்டு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த யானை உற்சவத்தின் நடுவே திடீரெனக் கட்டுப் பாட்டை இழந்து தெருக்களில் வெறித்தனமாக ஓடியது. இத னால் அப்பகுதியில் நின்றிருந்த வாகனங்களும் கட்டடங்களும் சேதமடைந்தன; உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் அலறிடித்து ஓடிய காட்சியால் அங்கு கடும் பீதி நிலவியது.
யானை தொடர்ந்து சினம் கொண்டு ஆவேசமாக ஓடியதால் அதன் மீது பொருத் தப்பட்டிருந்த வெள்ளி அம்பாரி எனப்படும் மாபெரும் அலங் காரப் பீடம் வழியிலேயே கீழே விழுந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினரின் உதவியுடன், கால்நடை மருத்துவ அதிகாரிகள் உடனடியாகச் செயல்பட்டு யானைக்கு மயக்க மருந்து செலுத்தி அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் கோட்டை சீதாராமஞ்சநேயா கோயிலில் வைத்து அந்த யானைக்குத் தேவையான சிகிச்சைகளும் ஓய்வும் அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையொட்டி ஷிவமொக்கா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் கோட்ட வனத்துறை அதிகாரி ஆகியோர் நிகழ்வு இடத்திற்கு நேரில் விரைந்து சென்று நிலை மையை நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை மேற் கொண்டனர்.
இந்தத் தசரா திருவிழா கொண்டாட்டங்கள் மைசூரில் தான் நடைபெறுகின்றன. அங்கு விஜயதசமி நாளில் நடைபெறும் ‘ஜம்பு சவாரி’ ஊர்வலத்தின் போது, யானை மீது தங்க அம்பாரி சுமந்து செல்வது ஒரு வழக்கமாகும் என்பது குறிப் பிடத்்தக்கது.
