திருமருகலில் எழுச்சியோடு நடைபெற்ற பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம்! தொகுப்பு: நாகை நாத்திக.பொன்முடி

7 Min Read
- Advertisement -

திருமருகல், அக்.22 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அதன் விவரம் வருமுாறு:

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டையில், கடந்த 10.10.2026 அன்று மாலை 5 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில், தந்தை பெரியார் 148 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – பெரியார் பட ஊர்வலம், ஒளி உமிழ் இரு முனையம். (சுருக்கமாக எல்.இ.டி.) திரை முறையில் மாபெரும் பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தவில் – நாதசுவரக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

திராவிடர் கழகம்

பெரியார் பட ஊர்வலம்

மாலை 5.30 மணியளவில் கூட்ட மேடையில் தொடங்கிய பெரியார்  பட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக 3 கிலோ மீட்டர்  சென்றது.

திராவிட மாணவர்  கழக மாநில இணைச் செயலாளர் மு. இளமாறன் தலைமையில், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிடர் கழக இலட்சியக் கொடியை அசைத்து பெரியார் பட ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.

பெரியார் பிஞ்சுகள், திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, மகளிர் பாசறை, மகளிரணி மற்றும் கழகத் தோழர்கள், குறிப்பாக திருமருகல் வட்டாரம் மருங்கூர், கொட்டாரக்குட்டி, கீழ்வேளூர் வட்டாரம் ஒக்கூர், கடம்பங்குடி, ஓர்குடி, குருக்கத்தி, சோழங்கநல்லூர், திருவாடுதுறைமங்கலம், எரவாஞ்சேரி, வடுகூர் போன்ற பகுதிகளிலிருந்து வேன், டெம்போவில் கழகத் தோழர்கள் மற்றும் பெரியார் உணர்வாளர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் “தந்தை பெரியார்”  வாழ்க, “அன்னை மணியம்மையார்” வாழ்க, “தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி”  வாழ்க, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, ஜாதியை ஒழிப்போம், மதவெறியை மாய்ப்போம், பெண்ணுரிமை காப்போம் தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணிமுடிப்போம்” என்று இலட்சிய முழக்கங்களை முழங்கினர். திரையில் (எல்.இ.டி.) தந்தை பெரியார் படம், தவில் நாதசுவரம் இசை,  தோழர்களின் கைகளில் பட்டொளி வீசிப் பறக்கும் இலட்சியக் கழகக்கொடி,  உணர்வுப்பூர்வமான கொள்கை முழக்கம் என வீதியெங்கும் பார்க்கும் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. திருமருகல் ஊரே பெரியார் பிறந்த நாள் விழாக் கோலம் பூண்டிருந்தது.

பொதுக்கூட்டம்

பேரணி முடிந்து 7 மணிக்குப் பொதுக் கூட்டம் தொடங்கியது.

திருமருகல் ஒன்றியத் தலைவர் இராச.முருகையன், தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர் சு.இராஜ்மோகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராசு, மாவட்ட துணைச் செயலாளர் கி.சுர்ஜித், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் ப.காமராஜ், மாவட்ட விவசாய தொழிலாளரணிச் செயலாளர் இரா. இராமலிங்கம், மாவட்ட மகளிரணித் தலைவர் பு.அலமேலு, மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.ஆர்.அறிவுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர்  வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, ஆகியோர் தொடக்க உரையாற்றினார்.

தொடர்ந்து, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றுகையில்,  ‘‘திருமருகல் பகுதி எப்போதுமே கழகத்தின் கோட்டையாக விளங்கும் பகுதி. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பலமுறை இதே இடத்தில் உரையாற்றியிருக்கிறார். குறிப்பாக நாகைப் பகுதிக்குச் சுற்றுப்பயணம் வந்தால்  நம் தலைவர் குறிப்பிடுவது, ‘‘என் சொந்தங்களைப் பார்க்கப் போகிறேன்’’ என்று உற்சாகத்துடன் புறப்படுபவர்தான் தமிழர் தலைவர். அதே உற்சாகத்துடன் பெரியார் பட ஊர்வலம், பொதுக்கூட்டத்தைத் திருமருகல் பகுதியில் உள்ள நம் தோழர்கள், சிறப்பாக நிகழ்வினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரியார் பட ஊர்வலம் என்பது பெரியாருக்காக அல்ல! பெரியார் என்பது ஒரு வாழ்வியல் சித்தாந்தம்!

அதே பாதையில் தான் நம் தமிழர் தலைவர் 93 வயதிலும் சுறுசுறுப்பாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், எழுதுகிறார், அறிக்கை விடுகிறார். எந்தப் புத்தகம் கிடைத்தாலும் அடுத்த மணித் துளி களில் படிக்க ஆரம்பித்து,  அதைப்பற்றி சுட்டிக்காட்டி  மறு(ப்பு) புத்தகமும் எழுதுவார். பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம்’’ என்றார்.

மாநில துணைப் பொதுச் செயலாளர்
சே.மெ. மதிவதனி சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில், ‘‘திருமருகல் என்பது திராவிடர் கழகத்தின் கோட்டை இந்த திருமருகல் பகுதியில் பல கழகக் களங்களைக் கண்ட இந்த மண்ணில் இந்த நிகழ்வை மிக எழுச்சியுடன் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய பொறுப்பாளர்களுக்கு நன்றி. இதே  பகுதி மருங்கூரில்  பார்ப்பனர்கள் ஆதிக்கம் நிறைந்திருந்தது. ஆனால், இன்றைக்கு அவர்களுக்குச் சரிக்குச் சமமாக அனைத்து மக்களும் பொதுச்சாலையைப் பயன்படுத்தி பொதுக் கிணற்று நீரைப் பயன்படுத்த முடிகிறது என்று சொன்னால், இந்த மண்ணில் வாழ்ந்த கருப்பு சட்டைக்காரர்களால்தான்.

இன்றைக்கு நாங்கள் எல்லாம் மேடை போட்டு மைக் வைத்து மிக எளிதாகப் பேச வந்து விடுகிறோம். ஆனால், தந்தை பெரியார் காலத்தில் எத்தனை இடையூறுகள்? இதே மண்ணில் தந்தை பெரியார் பேச வந்தபோது, கொதிக்க வைத்த தண்ணீரைத் தூக்கி அவரை நோக்கி ஊற்றினார்கள்; மேடைக்குப் போடப்பட்டிருந்த முட்டுகளை எல்லாம் தள்ளிவிட்டு, பல இடையூறுகளை அளித்திருக்கிறார்கள். ஆனால், அத்துணை இடையூறுகளையும் தாண்டி, தன் மீது வீசப்பட்ட அழுகிய முட்டைகள், மலம் என எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு. கடைசி நிமிடம் வரை தன்னுடைய உடல் முழுவதும் மெலிந்து போன பிறகும் இந்த மக்களுக்காக களத்தில் நின்று பேசிய தலைவர் தந்தை பெரியார்.

இங்கே ஒரு செல்போன் கடை இருக்கிறது. அதில் உள்ள பலகையில் உங்களுடைய பழைய ஃபோன் எந்த நிலையில் இருந்தாலும் மாற்றித் தரப்படும் என்று எழுதி இருக்கிறது. ஆக பழைய போனை மாற்றுவதற்குக் கூட இங்கே வழி இருக்கி றது. ஆனால், நம் தலையில் இருக்கிற, பல காலங்களாக மூடநம்பிக்கைகளால் ஊறிப்போன இந்த மூளையை மாற்ற முடியுமா?  முடியாது. ஆனால், மூளையில் இருக்கக்கூடிய சிந்தனைகளை மாற்ற முடியும். மூடநம்பிக்கைகளை அகற்ற முடியும். அந்த மூளைக்குப் போடப்பட்ட மூடநம்பிக்கை விலங்கை அகற்றுவதற்காக இந்த மண்ணில் புறப்பட்ட தலைவர் தான் தந்தை பெரியார்’’ என்றார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு. இளமாறன்,  மாநில திராவிட மாணவர் கழகத் துணைச் செயலாளர் தே.நர்மதா, மருத்துவர் ஜெ. வைக்கமதி, காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்வில், பொதுக்குழு உறுப்பினர் ந. கமலம், மாவட்ட இணைச் செயலாளர் ரெ.துரைசாமி, திரு மருகல் ஒன்றிய துணைத் தலைவர் க.சின்னதுரை, திருமருகல் வட்டார விவசாய அணிச் செயலாளர் மருங்கூர் காமராஜ், கீழ்வேளூர் வட்டார விவசாய அணிச் செயலாளர் ஒக்கூர் இராஜேந்திரன், திருமருகல் ஒன்றிய துணைச் செயலாளர் இரா.ரமேஷ்,  திருமருகல் ஒன்றிய இணைச் செயலாளர் நாக.ரவிச்சந்திரன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் இரா.பேபி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.ஜெயப்பிரியா, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கு.கமலராஜன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் க.பாரதி,  மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செ.பாக்கியராஜ், திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் ப.செல்வகுமார், வேதை ஒன்றியச் செயலாளர் அய்யப்பன், கீழ்வேளூர் நகரத் தலைவர் அ. பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் ம. முத்துராஜா, கீழ்வேளூர் வட்டார விவசாய அணி குறுக்கத்தி தமிழ்ச்செல்வன், திருமருகல் ஒன்றிய மகளிர் பாசறைச் செயலாளர் இரா.ரம்யா, வேதை ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகம், கீழ்வேளூர் ஒன்றியத் துணைத் தலைவர் அ. அரங்கராசு, வேதை நகரத் தலைவர் சு.சக்திவேல், திருமருகல் ஒன்றிய இளைஞரணி தலைவர் செ.சண்முகம், திருமருகல் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகம் சி. தங்கையன்,  கு.சிவானந்தம்,  இளைஞரணி வே.தீபன்சக்கரவர்த்தி, இ.பி. கஜேந்திரன், மருங்கூர் ம. மகேந்திரன், புத்தகரம் இலட்சுமணன், மருங்கூர் முனுசாமி, புத்தகரம் சிறீதர், மாணவர் கழகம் சா.அறிவாளன், ரூசோ குப்தா, அ.இதழினி, இரா.தமிழின், இரா.யாழினி, கும்பகோணம் மாவட்டக் காப்பாளர் தாராசுரம் வை. இளங்கோவன், திருவாரூர் மாவட்டக் காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.கரிகாலன்,  நன்னிலம் ஒன்றியத் தலைவர் க.தன்ராஜ், தனசஞ்சிவி, சரவணன், தமிழ்மணி, திருவாரூர் ஒன்றியத் தலைவர் க.கவுதமன்,  ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி, மாவட்ட மகளிரணித் தலைவர் சரசு, ஒன்றிய மகளிரணித் தலைவர் க.சரோஜா, ஒன்றிய துணைத் தலைவர் ராஜேந்திரன், ஆலோசகர் கோவிந்தராஜ், வடுகக்குடி  பழனிச்சாமி.

காரைக்கால் மாவட்டம்

மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.செந்தமிழன், மாவட்ட இளைஞரணி செயலாளர், லூயிஸ் பியர், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் நாத்திக.பைசில்.

பாராட்டிச் சிறப்புச் செய்தல்

திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் வாழ்குடி செல்வ குமார்- சுபா ஆகியோர் மகள் செ.பூவிழி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500/467 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவி மற்றும் பொதுக் கூட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய கழகத் தோழர்களுக்கும், மாநில  கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், சிறப்புச் செய்தார். மருத்துவர் வைக்க.மதி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், ஆகியோருக்கு மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், சிறப்புச் செய்தார்.

நிறைவாக, நாகை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு. குட்டிமணி, கூட்டத்திற்கு உறுதுணையாக இருந்த தோழர்களுக்கும், ஒலிபெருக்கி உரிமையாளர், குறிப்பாக அனுமதி வழங்கிய காவல்துறையினருக்கும் நன்றி நன்றி என்று, நிகழ்வினை முடித்து வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *