சென்னை, ஆக 30- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச் சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி குறித்து அமைச்சர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே சுவாரஸ்யமான விவாதம் நடைபெற்றது.
விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய தவெக வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜ்குமார், “கடந்த 59 ஆண்டுகளாக இரு பெரும் திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றி மாற்றி ஆட்சி செய்துள்ளன. அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று கூறிவிட முடியாது; பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு மாநிலம் வளர்ச்சி பெற்றுள்ளது. சில இடங்களில் மின்சாரம் இல்லை, சரியான சாலை வசதி இல்லை என்றார்.
அதற்கு பதில் கூறிய எ.வ.வேலு “நாங்கள் போடாத சாலையிலா இவர் செல்கிறார்? நாங்கள் கட்டாத மருத்துவமனையிலா மக்கள் சிகிச்சை பெறுகிறார்கள்? நாங்கள் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தான் நீங்கள் தற்போது ஆட்சியை நடத்தி வருகிறீர்கள்” என பதிலடி கொடுத்தார்.
ஜே.சி.டி.பிரபாகர் (பேரவைத் தலைவர்): “1980-களில் நான் மாவட்ட செயலாளராக இருந்தபோது பல பகுதிகளில் சாலைகளோ, மின்விளக்குகளோ இருக்காது. ஆனால் இன்று அப்பகுதிகள் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளன. ஒவ்வொரு ஆட்சியிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன; இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற கோணத்திலேயே அமைச்சர் கூறியதை எடுத்துக்கொள்ள வேண் டும்” என்று சமரசம் செய்தார்.
அமைச்சர் ஆனந்த்: “கடந்த காலத்தில் நல்ல திட்டங்கள் செய்யப் பட்டுள்ளன. தற்போதைய மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை போன்ற குறைகளை எங்கள் ஆட்சியில் நிவர்த்தி செய்து காட்டுவோம்” என்றார்.
ஓ.பன்னீர்செல்வம்: “திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதத்தை எட்டியுள்ளது என்றால், அது திராவிட பாரம் பரியத்தின் வழியில் வந்த வளர்ச்சி யாகவே பார்க்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
விவாதத்தின் நிறைவாகப் பேசிய அமைச்சர் ராஜ்குமார், “நான் எந்தவொரு குறிப்பிட்ட கட்சி யையோ அல்லது ஆட்சியையோ சுட்டிக்காட்டிப் பேசவில்லை. அனைவரும் சிறந்த முறையில் பணியாற்றியுள்ளீர்கள்; விடுபட்ட சில குறைகளை மட்டுமே சுட் டிக்காட்டினேன்” என்று கூறி விவா தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
