லண்டன், அக். 19-இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டன் நாடாளுமன்றம் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்அய்ஆர் விவகாரத் தில் முறைகேடு நடந்த தாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப் பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, டில்லி யில் 16.10.2026 அன்று தேசியக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தவிருந்த சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் விடு விக்கப்பட்டார்.
இந்த நிலையில், போராட்டத்தின் அடுத்த கட்டமாக லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தின் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லண்டன் நாடாளு மன்ற சதுக்கம் அருகே ஞானேஷ் குமாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் ஆர்ப்பாட்டம் நடத்திய தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஞானேஷ் குமாருக்கு எதிராக லண்டனில் போராட்டத்தைத் தொடங்கிய சிஜேபி!
Leave a Comment
