செவ்வாய்க் கோளின் பண்புகள் கொண்ட நிலப்பரப்புகள் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு!

- Advertisement -

சென்னை, அக்.19- பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதா என்ற ஆராய்ச்சியில் செவ்வாய்க்கோள் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க் கோளின் புவியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளுடன் ஒத்துப்போகக்கூடிய அரிய நிலப்பரப்புகள் தமிழ்நாட்டின் நெய்வேலி மற்றும் திருச்சி பகுதிகளில் இருப்பதை இந்திய விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர்.

இவைபோன்ற ஒரு பகுதி தென் அமெரிக்க நாடான சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் கண்டறியப் பட்டுள்ளது. இது தொடர்பாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கனிம வகைகள்

தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், சிலியின் அட்டகாமா பாலைவனத்திலும் இரண்டு முக்கிய கனிம வகைகள் கண்டறியப்பட்டன. செவ்வாய்க் கோளுடன் புவியியல், வேதியியல் மற்றும் இயற்பியல் ரீதியான ஒற்றுமைகளை பிரதிபலிப்பதால், அப்பகுதிகள் செவ்வாய்க் கோளுக்கு நிகரான புவியியல் பகுதிகளாக இருக்கலாம் என்பதை நிரூபிக்க இவை உதவியுள்ளன.

அதிநவீன பகுப்பாய்வு கருவிகள்

கோள்கள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், புவிசார் ஒற்றுமை கொண்ட தளங்களை கண்டறிவது ஒரு முக்கியமாக மாறியுள்ளது. சுற்றுப்பாதை சார்ந்த தரவுகளால் மட்டும் செவ்வாய்க் கோளில் உள்ள கனிமங்களை முழுமையாக வகைப்படுத்த முடியாது என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இந்த ஆய்வுகளுக்கு துல்லியம் வாய்ந்த, அதிநவீன பகுப்பாய்வு கருவிகள் அவசியமாகிறது.

திருச்சி

கேரள பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் உள்ள அறிவியல் தொழில்நுட்பத் துறை – அறிவியல் தொழிலுட்ப மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன் செயல்படும் லேசர் ராமன் நிறமாலைமானி உள்ளிட்ட மேம்பட்ட கருவிகள், தமிழ்நாட்டின் நெய்வேலியில் மெலன்டரைட்டையும், சிலியின் அட்டகாமா பாலைவனம் மற்றும் தமிழ்நாட்டின் பாதியளவு வறண்ட புவியியல் மற்றும் பழங்கால பருவநிலை பகுதியான திருச்சிராப்பள்ளி அருகே உள்ள தரிசு நிலங்களில் ஜிப்சத்தையும் கண்டறிய உதவியுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *