தொடர் விபத்துகள் – ஏராள உயிரிழப்புகள் – திருந்தாத ஒன்றிய அரசின் பாதுகாப்புக் குளறுபடி!

- Advertisement -

அந்தோ, பட்டும் புத்தி வரவில்லை பக்தியால் எத்தனை உயிர்கள் பலியாவது?
தெற்கு – வடக்கு – கிழக்கு என நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாட்டத்தில்

 

நாடு முழுவதும் நவராத்திரி, துர்கா பூஜை கொண்டாட்டம் என நிகழ்வுகள் வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று மாநிலங்களில் நடந்த துயர நிகழ்வுகள் பக்தர்களை உறைய வைத்துள்ளது. மொத்தம் 33 உயிர்கள் பலியாகியுள்ளன.

தெற்கு – அய்தராபாத்தில் தாண்டியா கொண்டாட்டத்தில் விளக்கு கம்பம் சரிந்து – 2 மாணவர்கள் உயிரிழப்பு!

அய்தராபாத் நாதர்குல் பகுதியில் உள்ள எம்.வி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் நேற்று (17.10.2026) இரவு நடைபெற்ற தாண்டியா கொண் டாட்டத்தில் மின்விளக்கு டிரஸ் (lighting truss) திடீரென சரிந்து விழுந்தது. இதில் வனபர்த்தியை சேர்ந்த சோனி என்ற முதலாம் ஆண்டு மாணவி உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அவரது சகோதரி உட்பட 5 பேர் கவலைக்கிடமான நிலையில் காமினேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 17 முதல் 20 பேர் வரை காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் கடும் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு – கொல்கத்தாவில் துர்கா பூஜை பந்தலில்
கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு!

கொல்கத்தா சோர்பகான் சர்போ ஜனின் துர்கா பூஜை பந்தலில் நேற்று (17.10.2026) மாலை பெய்த திடீர் மழையால், வெளியே காத்திருந்த பக்தர்கள் ஒரே நேரத் தில் உள்ளே நுழைய முயன்ற போது கூட்ட நெரிசல் ஏற் பட்டு 19 பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர்.

தனியார் பாதுகாவலர்கள் விசில் அடித்ததும், ஒலிப்பெருக்கியில் தவறான அறிவிப்பு வெளியானதுமே இந்த துயரத்திற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அரசு வேலையும் அறிவித்துள்ளது. 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவாலியரில் சீத்தலா தேவி கோயில்
சுவரில் மோதி 12 பக்தர்கள் உயிரிழப்பு!

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் சீத்தலா தேவி கோயில் சுவரில் லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்த 39 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள சீத்தலாதேவி கோயில் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று கோயிலின் சுவர் மற்றும் மக்கள் கூட்டத்தின் மீது மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பக்தர்கள் கூட்டத்தின் மீது ஏறி கோயிலின் சுவரில் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலும், மருத்துவமனையிலும் சேர்த்து 12 பேர் உயிரிழந் துள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்சோர் (Chhinor) பகுதியிலிருந்து வந்த தானியங்கள் ஏற்றிச் சென்ற லாரி, பளுவான வாகனங்கள் செல்லத் தடைசெய்யப்பட்ட செங்குத்தான சரிவுப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து, காவல்துறை தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்ற அந்த டிரக், சாலையில் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது ஏறிச் சென்று, கோயிலின் வெளிச்சுவர் மற்றும் நுழைவாயிலில் மோதியதாகக் கூறப்படுகிறது.

ஆன்மிக சுற்றுலா சென்றபோது சோகம்

பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து – 8 பேர் பலி!

பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஆன்மிக சுற்றுலா சென்ற 8 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் கட்பிராலி கிராமத்தை சேர்ந்த 23 பேர் வேனில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு 4 நாட்கள் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இந்நிலையில் ஆன்மிக சுற்றுலாவின் ஒரு பகுதியாக ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் உள்ள காது ஷியாம் இந்து மத வழிபாட்டு தலத்திற்கு நேற்று (17.10.2026) அதிகாலை வேனில் சென்றனர்.

ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தில் உள்ள டில்லி – மும்பை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்றபோது சிம்லியா கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்தனர்.

ஒன்றிய அரசு திருந்துமா?

மத விழாக் காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தேசிய அளவில் எந்தவித பாதுகாப்பு வழிகாட்டுதலும், தரமான தணிக்கையும் இல்லாததே இந்தத் தொடர் உயிரிழப்புகளுக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தெற்கில் கல்லூரி நிகழ்ச்சிக்கு அனுமதி கூட வாங்காமல் 80 அடி டிரஸ் அமைத்தது, கிழக்கில் பந்தலில் பாதுகாப்பு வழிகள் இல்லாதது, வடக்கில் தடை செய்யப்பட்ட பாதையில் லாரி நுழைந்தது என அனைத்திலும் நிர்வாக தோல்வி வெளிப்பட்டுள்ளது. பக்தர்களின் உயிரை காக்க ஒன்றிய அரசு இனியாவது தேசிய பாதுகாப்பு தரநிலையை கொண்டு வருமா என்பதே பொதுமக்களின் கேள்வி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *