மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கும் அபாயம்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஜூலை 26- 10ஆம் வகுப்பு பிளஸ் 2, மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பட்டதாரி, பட்ட மேற்படிப்பு ஆசிரியர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடுபடுத் தப்படுவதால் காலை, மாலை சிறப்பு வகுப்புகள், பள்ளி நேர வகுப்புகளை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நடப்பாண்டில் அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி ஆக.1ஆம் தேதி தொடங்கி அந்த மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதற்கான வீட்டுப் பட்டியல் மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.

இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கு 150 முதல் 250 வீடுகள் வழங்கப் படுவதாகக் கூறப்படுகிறது. கணக்கெடுப்புப் பணியின்போது சொந்த வீடா, வாடகை வீடா, ஓட்டு வீடா, கூரை, ப்ரிட்ஜ், நெட் வசதி, கார் உள்ளிட்ட 34 வகை சொத்துப்பட்டியல் விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.

தற்போது பொதுமக்கள் தங்களின் சுயவிவரங்களை ‘மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு’ மூலம் வீட்டில் இருந்தபடியே அதிகாரப்பூர்வ வலைதளம் வாயிலாக எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவற்றையும் கணக்கெடுப் பார்கள், வீடு வீடாகச் சென்று ஆய்வு செய் வார்கள்.

இந்நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆசிரியர்கள் இந்த கணக்கெடுப்பு பணிக்கு ஆக.1 முதல் செல்ல உள்ளதால் காலை, மாலை நேரங்களில் அவர்கள் மாணவர்களுக்கு எடுக்கும் சிறப்பு வகுப்புகள் பாதிக் கப்பட உள்ளன.

இதுகுறித்து ஆசிரி யர்கள் கூறியதாவது: 10ஆவது, பிளஸ் 2 வகுப்புகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களை கூடுதல் மதிப்பெண் எடுக்கவைக்கவும், கற்கும் திறன் குறைந்த மாணவர்களைத் தேர்ச்சிபெற வைக்கவும் தற்போது அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 8.30 முதல் 9 மணி வரையும் மாலை 4.30 முதல் 5.30 மணி வரையும் நாள்தோறும் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தற்போது ஆசிரியர் களை மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஈடு படுத்த உள்ளதால் அவர்கள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வாய்ப்பில்லை. இந்த சிறப்புப் பயிற்சி வகுப்புகள்தான் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி யாக இருந்து வருகிறது.

மக்கள்தொகை கணக் கெடுப்பில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது கூடுதல் பணிச்சுமையைத் தருவ தாகவும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக் கப்படுவதாகவும் ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரு கின்றன.

ஆனால், அவர்களின் கருத்துகளை மாவட்ட நிர்வாகம் அரசின் கவனத்துக்குக்கொண்டு செல்லவில்லை. ஆசிரியர் களுக்குப் பதிலாக படித்த இளைஞர்கள், தன்னார்வலர்களை இப்பணிகளுக்குப் பயன் படுத்த அரசு முன்வர வேண்டும் என்று கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *