‘டில்லி போராட்டம் குறித்து அவதூறு’ பாஜக கவுன்சிலர்மீது நடவடிக்கை

- Advertisement -

புதுடில்லி, அக்.18 மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக கவுன்சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள புனலூரில் நடைபெற்ற பாஜக சார்பான விழாவில் கவுன்சிலரும் , முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநருமான ஸ்ரீலேகா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி போராட்டம் நடத்தி வருகிறார். அங்கே, போதைப்பொருள் அளவுக்கு அதிகமாக உடலுக்குள் சென்றால் ஏற்படுவது போன்ற பதற்றத்தையும், தவிப்பையும் தான் அவர் வெளிப்படுத்தி வருகிறார்” என்று பேசியிருந்தார்.
இதற்குக் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸார் அளித்த புகாரின் பேரில் புனலூர் காவல்துறையினர் சிறீலேகா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதே போல, திருவனந்தபுரத்திலும் இது தொடர்பாகக் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக காவல்துறையினர் கலவரங்களைத் தூண்டும் வகையில் பேசியதாக பி.என்.எஸ் 192-இன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட வீடியோவை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து, சிறீலேகா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *