ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் சாதனை!

- Advertisement -

ஜெயங்கொண்டம், அக். 18- பள்ளிக் கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள், 6 குறுவட்ட அளவில் நடைபெற்றன. இதில் 14, 17 மற்றும் 19 வயதுப் பிரிவுகளில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்களது திறமையையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றனர்.

குண்டு எறிதல் போட்டியில் வருண் பிரசாத் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். உயரம் தாண்டுதல் போட்டியில் ஆதவன் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.. 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் துளசிமணி மூன்றாம் இடத்தையும், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந் தயத்தில் மாணவர் மூன்றாம் இடத்தை யும் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்குப் பயிற்சி அளித்து வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியரை யும் பள்ளியின் முதல்வர் பாராட்டி, மாணவர்களின் தொடர் வெற்றி களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மாணவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் உடற்கல்வி ஆசிரியரின் சிறப்பான பயிற்சி ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. கல்வியுடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கும் மாணவர்களின் சாதனை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டில் வெற்றி பெறுவது மட்டுமல்ல; விடாமுயற்சியுடன் இலக்கை நோக்கிப் பயணிப்பதே உண்மையான சாதனை!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *