பெங்களூரு, அக். 16- பெங்களூரு உயர்நீதிமன்றம் வாயிலில் எஸ்.அய்.ஆர். நீக்கக் கோரி கருநாடக மாநில கழகத்தின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
13.10.2026 அன்று பகல் 12 மணிக்கு வாக்குரிமை சார்ந்த எஸ்.அய்.ஆர். முறையை முற்றிலும் நீக்கிடவும், வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வரவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் பதவி விலகிடவும், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்திடக் கோரி வழக்குரைஞர்கள் பல அமைப்புகள் கருநாடக மாநில திராவிடர் கழக வழக்குரைஞர்கள் பிரிவு சார்பில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு மூத்த வழக்குரைஞர் பாலன் தலைமையில், சமூக செயற்பாட்டாளரும், மூத்த வழக்குரைஞருமான தி.நரசிம்மமூர்த்தி ஏற்பாட்டிலும், கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சே.குணவேந்தன் முன்னி லையில் நடைபெற்றது.
மாநில கழகத் துணைத் தலைவர் ஜெ.அருண், இளம் போராளிகள் வழக்குரைஞர் கு.சவுமியா, திவ்யா மற்றும் ஏராளமான வழக்குரைஞர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு பதாகைகள் ஏந்தி, எழுச்சி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வழக்குரைஞர்கள் பலரும் ஆர்ப்பாட்ட நோக்கங்களை விளக்கி உரை நிகழ்த்தினர்.
