வல்லம், தஞ்சாவூர், அக்.16– பெரியார் மணியம்மை நிகர்நிலைப்பல்கலையில் இயங்கி வரும் பெரியார் சமுதாய வானொலி 90.4 சார்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு மாணவர்கள் கல்விச்சுற்றுலா சென்றனர்.
ஊடகம், பத்திரிகைத்துறை, தொலைக்காட்சி ஒளிபரப்பின் தொழில்நுட்பம், செய்தி தயாரிப்பு, நேர்காணல் மற்றும் பல்வேறு ஊடகச் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். இது அவர்கள் நேரடியாக அறிந்து கொள்வதற்கு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
புதிய தலைமுறை செய்தி சேனல் ஆசிரியர் சமசும், மற்றும் அரசியல் மற்றும் நடப்பு விவகாரங்கள் ஆசிரியர் க.கார்த்திகேயனும் பரபரப்பான பணிகளுக்கிடையிலும் மாணவர்களுடன் நேரம் செலவிட்டு, தங்களது மதிப்புமிக்க அனுபவங்களையும், அறிவுரைகளையும் பகிர்ந்து கொண்டனர். செய்திகள் சேகரிப்பது, தயாரிப்பது, நேர்காணல் செய்வது ஊடகக் கருவிகளை கையாள்வது, மக்களிடம் எப்படி அணுகுவது போன்ற தகவல்கள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள சிந்தனையைத் தூண்டும் மற்றும் மறக்க முடியாத அனுபவமாகவும் அமைந்தது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொலைக்காட்சியின் சார்பாக ஹரி நந்தகோபாலும் (தலைவர் – நிகழ்ச்சிகள் துறை) மற்றும் மீ.முத்துகுமார் (கிழக்கு மண்டலத் தலைவர்) மற்றும் பெரியார் சமுதாய வானொலியின் இயக்குநர் முனைவர் ச.நர்மதாவும் ஏற்பாடு செய்திருந்தனர்.
