அரசுப் பேருந்தில் தி.மு.க. குறித்த சர்ச்சை வாசகம் 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம்

- Advertisement -

விழுப்புரம், அக். 16- விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஒன்றின் பின்பக்க டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில், “திமுக ஒரு தீயசக்தி, அப்பாவை காணோம்” என்று திமுக குறித்த கடுமையான விமர் சனங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதனை, பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் காட்சிப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைர லாக்கினர்.

இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் டிஜிட்டல் ரூட் அறிவிப்பு பலகையை தயாரித்த நிறுவனத்தின் அலுவலர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் டிஜிட்டல் ரூட் அறிவிப்பு பலகையின் மதர் போர்டு சரியாக முடக்கம் செய்யப்படாமல் இருந்தது தெரியவந்தது. பேருந்தின் ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் விசாரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி மற்றும் 11-ஆம் தேதி பணியில் இருந்த ஓட்டுநர் சித்திரை செல்வன், நடத்துநர் செந்தாமரை கண்ணன், 10, 12-ஆம் தேதி பணியில் இருந்த ஓட்டுநர் பரந்தாமன், நடத்துநர் வெங்கடேஷ், 13-ஆம் தேதி பணியில் இருந்த நடத்துநர் மணிகண்டன் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 5 ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் ச. சிறீதரன் நேற்று (15.10.2026) உத்தரவிட்டுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில்  தி.மு.க. தலைவர்கள் குறித்து அவதூறுப் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்
காவல்துறைக்கு
உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை, அக்.16- தி.மு.க. தலைவர்கள் மற்றும் அவர் களது குடும்பம் குறித்தும் சமூக வலைத் தளங்களில் அவதூறாகவும், தவறாகவும் பரவும் பதிவுகளை நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்குரை ஞர் நடராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், “தவறான பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கப்பட்டது தொடர்பான விபரங்களின் அறிக்கை வருகிற 29-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்டார்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *