ஜப்பான் தலைநகர் டோக்கியோ வில் அக்டோ பர் 11, 12 ஆகிய நாள்களில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மனித நேய மாநாட்டிற்காக கடந்த 9 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பேராளர்கள், மாநாட்டில் பங்கேற்று விட்டு, வரும் 16.10.2026 அன்று காலை 9.20 மணிக்கு சென்னைக்குத் திரும்புகின்றனர்.
அவர்களை வரவேற்க, விமான நிலையத்தில் கழகத் தோழர்கள் பெரு மளவில் வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பாக வடசென்னை, தென்சென்னை, மேற்கு சென்னை, தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
வரவேற்பில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.
– தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்
