மதுராந்தகம், செப். 25- வரும் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ள மதுராந்தகம் இடைத் தேர்தலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமனை ஆதரித்து, அக்டோபர் 1 அன்று வையாவூரில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்கள். (படாளத்திலிருந்து வேடந்தாங்கல் சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் உள்ளது வையாவூர்.)
அதற்கான ஏற்பாட்டுப் பணியில், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன், காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர்
அ.வெ.முரளி ஆகியோர், 23.9.2026 அன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர் க.சுந்தர் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர். வையா வூரில் மிகச் சிறப்பாகத் தமிழர் தலைவர் பங் கேற்கும் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவோம் என்று தெரிவித்து ஆசிரியர் அவர்களின் வருகையைத் தகவல் பலகையில் அவரே எழுதினார்.
படாளத்தில் உள்ள தி.மு.க. மதுராந்தகம் வடக்கு ஒன்றியச் செய லாளர் பி.எச்.சத்யசாய், வையாவூரில், மாவட்ட தி.மு.க. விளையாட்டு அணி அமைப்பாளர் தினேசு, தி.மு.க. கிளைக் கழகச் செயலாளர் வெங்கடேசு உள்ளிட் டோரையும், வையாவூரில் முகாமிட்டுள்ள அம்பத் தூர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், ஆகியோரையும் சந்தித்துப் பேசியதுடன், வையாவூரில் கூட்டம் நடைபெறும் இடத்தையும் பார்த்து உறுதிசெய்தனர்.
பின்னர் புழுதிவாக்கம் தேர்தல் பணிமனைக்குச் சென்று, மேனாள் அமைச் சர் பி.கே.சேகர்பாபுவைச் சந்தித்து ஆசிரியர் வருகை குறித்து உரையாடினர். இது தொடர்பாக, 27.9.2026 அன்று மதுராந்தகத்தில் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகக் கலந்துற வாடல் கூட்டமும் ஏற் பாடு செய்யப் பட்டுள்ளது.
