இது என்ன கூத்து! ஏஅய் வளர்ச்சியால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை!

- Advertisement -

அமேசான் நிறுவனர் கணிப்பு!

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், எதிர்காலத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும் என்று அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தனியார் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் கூறியதாவது:-

செயற்கை நுண்ணறிவு மூலம் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். குறைந்த வளங்களைக் கொண்டு அதிக உற்பத்தியை மேற்கொள்ள முடியும். இதனால், மக்கள் குறைவான நாட்கள் வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்துவதற்குத் தேவையான வருமானத்தைப் பெற முடியும். கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் குறையலாம். விரும்பினால், குடும்பத்தில் ஒருவர் மட்டும் வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தும் நிலை உருவாகலாம். மக்கள் குறைவாக வேலை செய்ய விரும்பினால், நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியமர்த்துவதும் கடின மாகலாம். செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால், எதிர்காலத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே வேலை செய்தாலும் குடும்பத்தை நடத்தும் அளவுவகு வருமானம் ஈட்ட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், எதிர்காலத்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்யும் முறைவரலாம் என்றும், ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெமி டைமன், வாரத்தில் மூன்றரை நாட்கள் வேலை செய்யும் நிலை உருவாகலாம் என்றும் கணித்துள்ளனர். இவை எதிர்காலம் குறித்த கணிப்புகளே. செயற்கை நுண்ணறிவால் கிடைக்கும் உற்பத்தித் திறன் வளர்ச்சி, ஊதியம் மற்றும் வேலை நேரத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன பொறுத்தே அமையும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *