சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read
- Advertisement -

கோவிலம்பாக்கம், அக். 14- சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 11.10.2026 அன்று கோவிலம்பாக்கம், விடுதலை நகரில் உள்ள தந்தை பெரியார் படிப்ப கத்தில் நடைபெற்றது.

மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.கலைச்செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார். மாவட்டச் செயலாளர் க.தமிழினியன் வரவேற்றார். புலவர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டக் காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு நோக்கவுரையாற்றினார். தோழர் திவாகரன் நன்றி கூறினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளான டிசம்பர் 2ஆம் தேதியைச் சிறப்பாகக் கொண்டாடுவதுடன், பிறந்தநாள் சிறப்பு மலரில் மாவட்டக் கழகத்தின் சார்பில் முழுப்பக்க விளம்பரம் வழங் குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 14ஆம் தேதி பால வாக்கத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ. மதிவதனி சிறப்புரையாற்றும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவது என்றும், அதற்கான சுவரொட்டிகளைத் தயாரித்து ஒட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற குடும்ப விழாவில் சிறப்பாகக் களப்பணியாற்றிய மாவட்ட மகளிரணித் தலைவி தேவி சக்திவேல் பாராட்டப்பட்டார்.

இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் பி.சி. ஜெயராமன், கீழ்க்கட்டளை சரவணகுமார், மனோகரன் (எ) பெரியார் பித்தன், பொற்செழியன் (பெரியார் பிஞ்சு), தொழிலாளரணியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *