கேரள சட்டப்பேரவையில் முதியோர் பாதுகாப்பு மசோதா தாக்கல்: துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறை!

- Advertisement -

திருவனந்தபுரம், அக்.14 கேரளத்தில் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதியோர் பாதுகாப்பு மசோதா நேற்று (13.10.2026) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக முதியோர் நலனுக்காகத் தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ள கேரளா, தற்போது இந்த புதிய மசோதாவின் மூலம் முதியோர்களின் உரிமைகளுக்கு வலு சேர்த்துள்ளது.

மசோதாவைத் தாக்கல் செய்து முதலமைச்சர் வி.டி.சதீசன் உரையாற்றியபோது, “கேரளத்தில் ஒரு முதியவர் கூட தனிமை யில் விடப்படக் கூடாது என்பதே இந்த மசோதா வின் முக்கிய நோக்கமாகும். முதியோரின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை இந்தச் சட்டம் முழுமையாக உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.

கடுமையான தண்டனை

முதியோர்களைத் துன்புறுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய் யப்பட்டுள்ளது. முதியோர்களின் சொத்துகளை அபகரிக்க முயற்சிப்பதும், அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதும் குற்றமாகக் கருதப் பட்டு சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

கேரளத்தில் உள்ள அனைத்து மூத்த குடிமக்கள் குறித்த விவரங்களும் அரசிடம் உள்ளதால், இந்தத் தரவுகளின் அடிப்படையில் பராமரிப்பு தேவைப்படும் முதியவர்கள் எளிதில் அடையாளம் காணப்படுவர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பும் உரிமைகளும் உடனடியாக உறுதி செய்யப்படும். முதியோருக்கு முறையான பராமரிப்பு வழங்குவதற்காக, பிரத்யேகப் பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்கும் வகைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.

முதியோர்களின் தனிமை மற்றும் பாதுகாப்பின்மைக்குப் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *