ஈரோட்டில் கொடூரம்! இடுகாட்டில் இடம் மறுப்பு! காலில் விழுந்து கெஞ்சிய தாழ்த்தப்பட்ட மக்கள்! த.வெ.க. அரசு என்ன செய்கிறது?

- Advertisement -

ஈரோடு, அக்.14- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இடுகாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரின் இறந்த உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், இருவர் காலில் விழுந்து கெஞ்சிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி யுள்ளது.

என்ன நடந்தது பெரும்பள்ளியில்?

ஈரோடு மாவட்டம் பெருந் துறைக்கு அருகில் உள்ள மாத்துப் பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தது பெரும்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் (SC) வசித்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக அங்குள்ள பொது இடுகாட்டில் இவர்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்ய பிற சமுதாயத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை சுமார் அய்ந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திங்களூர் பகுதிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த மக்கள் இருந்தனர்.

இந்தப் பிரச்சினை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர், சம்பந்தப்பட்ட இடுகாடு அனைவருக்கும் பொது வானது என்று பெருந்துறை வட்டாட்சியர் முன்பு அறிவித்திருந்தார்.

முதியவர் மறைவு

கடந்த அக்டோபர் 5 அன்று, அதே ஊரைச் சேர்ந்த 90 வயதான சென்னி என்ற முதியவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை கிராமத்தில் உள்ள பொது இடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய குடும்பத்தினரும் உறவினர் களும் முயன்றனர். ஆனால், அங்கு மற்றொரு பிரிவினர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்ததாகத் தெரிகிறது.

இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, “இங்கே அடக்கம் செய்தால் ஊருக்குள் உங்களுக்கு எந்த வேலையும் தரமாட்டோம்” என்று மிரட்டிய தாகக் கூறப்படுகிறது. இதனால் வேலை பறிபோய் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று பயந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த இருவர், வேறு வழியின்றி அங்கிருந்தவர்களின் காலில் விழுந்து கெஞ்சினர். இறுதியில், வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன் முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தீவிர விசாரணை

இருவர் காலில் விழுந்து கெஞ்சும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பரவியது. மனிதநேயமற்ற இந்தச் செயல் பொதுமக்களிடையேயும் பல்வேறு அமைப்புகளிடையேயும் கடும் கண்டனத்தை எழுப்பியது.

இதையடுத்து, பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் திங்களூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதிகாரிகள் முன்னிலையி லேயே மனிதநேயமற்ற இந்தத் தீண்டாமைக் கொடுமை அரங்கேறியுள்ளதாக சமூக ஆர்வலர்களும் எதிர்க்கட்சிகளும் கொந்தளித்து வரும் நிலை யில், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வருவது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உடனடியாகக் குரல் கொடுக்காமலும், தவறிழைத் தவர்கள் மற்றும் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது நேரடி நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிடாமலும் அமைதி காப்பது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *