தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாடு மீனவர்கள் 25 பேர்கள் மாலத்தீவு கடற்படையால் சிறை பிடிப்பு!

- Advertisement -

கோவில்பட்டி, அக். 14-  தூத்துக் குடியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை, 3 விசைப்படகுகளுடன் மாலத்தீவு கடற்படையினர் சிறைபிடித் துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், தருவை குளத்தைச் சேர்ந்த ரமேஷ்குமார், மைக்கேல் ஜான்சங்கர், சூசை பாக்கியம் ஆகிய மூன்று பேரும் விசைப்படகுகள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 3 செவுள்வலை விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக கடந்த 1ஆம் தேதி அதிகாலை தருவைகுளம் கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

நேற்று (13.10.2026) அதிகாலை மாலத்தீவு அருகே உள்ள பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக கூறி, 3 செவுள்வலை விசைப்படகுகளையும் சிறைபிடித்தனர்.

இதில், ரமேஷ்குமாருக்கு சொந்தமான படகில் தருவைகுளத்தைச் சேர்ந்த நிக்சன், ஜாக்சன், சால்டன், ராயப்பன், சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த அஜித், ராமச்சந்திரன், பால்ராஜ், தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த இசக்கிராஜா ஆகிய 9 பேர் இருந்தனர். இதுபோல், மைக்கேல் ஜான்சங்கரின் செவுள்வலை விசைப்படகில் தருவைகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ், ஷாம், ராஜேஷ், செல்வம், தாளமுத்துநகரைச் சேர்ந்த ஜெகதீஷ், ஜெகன், இஸ்ரேல் கண்ணன், புலி ஆகிய 8 பேர் இருந்தனர்.

சூசைபாக்கியத்துக்கு சொந்தமான படகில் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல், பரலோக நிஷாந்த், ஷியாம் ஜோஸ்வா, அந்தோணி அஜய், அந்தோணி திசன், வேம்பாரைச் சேர்ந்த அஜய், ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரைச் சேர்ந்த டைசன், புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் ஆகிய 8 பேர் இருந்தனர்.

மொத்தம் 25 மீனவர்களையும், அவர்கள் ஓட்டிச்சென்ற 3 படகுகளையும், படகில் இருந்த வலைகள், மீன்கள் ஆகியவற்றையும் சிறைப்பிடித்து, மாலத்தீவு கடற்படையினர் அந்நாட்டுக்கு கொண்டு சென்றனர். மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்குமாறு, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு, மீனவர்களின் உறவினர்களும், தருவைகுளம் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *