தருமபுரி, அக். 12- உலகத் தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை நமது இனத் திருவிழாவாகக் கொண்டாட வேண்டியது-நன்றி காட்டும் திருநாளாக மட்டுமல்ல, இனி நாம் பெறவேண்டிய உரிமைகளுக்காக உறுதி எடுத்து உழைக்கும் உற்சாகத் திருவிழாவும் ஆகும்.
சமூக நீதி, சமத்துவம், அனைவருக்கும் அனைத்தும், இனம் நலம் காக்க, உடல் நலம் காக்க, வாழ்வின் வாழ்வியலை காக்க, சுயமரியாதை காக்க, ஒவ்வொருவரின் வாழ்வில் பெரியார் என்கிற கொள்கை நடை அவசியம் என்பதனை பறைசாற்றும் விதமாக, பெரியாரின் தத்துவக் கொள்கை வாரிசு “தமிழர் தலைவர் ஆசிரியர்” “விடுதலை நாளேட்டில்” பெரியாரை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்கிற செய்திகளின் அடிப்படையில், தருமபுரி மாவட்ட கழக சார்பில் 4.10.2026 அன்று காலை சரியாக 08:00 மணிக்கு உலகத் தலைவர் பெரியாரின் 148ஆம் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தந்தை பெரியார் நடை வெகு சிறப்பாக மாவட்டத் தலைவர் பீம.தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கருப்புச் சட்டை மா.முனியப்பன் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார்.
இந்நிகழ்வு சிறப்படைய மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் ஒருங்கிணைப்பு செய்து சிறப்பாக வழி நடத்தினார்.
கொடியசைத்து பெரியார் நடையை தொடங்கி வைத்த பெரியார் மணியம்மை மருத்துவமனைக் குழும இயக்குநர் கவுதமன், கி.கோவேந்தன் (மாநில அமைப்புச் செயலாளர் விசிக), நாட்டான் மாது (நகர செயலாளர் கிழக்கு திமுக), மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, மாநில ப, க, துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் பெருமாள், ஊமை மு.சர்க்கரை ஒன்றிய துணைச் செயலாளர்(திமுக), மரு.அமுதினி இராஜேந்திரன் இயக்குஞர் மத்தூர் கலைமகள் கலாலயா மேல்நிலைப்பள்ளி, மரு.கனிமொழி ஆகியோர் இணைந்து திராவிடர் கழகத்தின் கொடியசைத்து பெரியார் சமத்துவ நடையை தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள்: மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மத்திய மாவட்டச் செயலாளர்(விசிக) த.கு.பாண்டியன், மண்டல துணைச் செயலாளர் (விசிக) மின்னல் சக்தி, சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி இராஜீ, சேலம் மாவட்டச் செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அ.சங்கீதா, கு.சரவணன், மேனாள் மாவட்ட தலவர் ப.க டி.பி.பழனியப்பன்-பி.கே.ஆர்..மலர்விழி, துணைத் தலைவர் மு.பரமசிவன், துணைச் செயலாளர் பெ.கோவிந்தராஜ், காரிமங்கலம் ஒன்றியத் தலைவர் சி.இராமசாமி, தொழிலாளர் அணி மாவட்டச் செயலாளர் பெ.மாணிக்கம், கதிர்.செந்தில்குமார் இர.கிருஷ்ணமூர்த்தி, பகுத்தறிவாளர் கழகம் சந்தப்பட்டி தீ.சிவாஜி, விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ம.சுதா, காமலாபுரம் கோவிந்தராஜ், பெங்களூரு இரா.இராஜா, நகர ஒன்றிய செயலாளர் பா.மதிக்கண்ணன், விவசாயி அணி மாவட்ட தலைவர் ஊமை.காந்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் த.மணிவேல், அம்பேத்கர் அறக்கட்டளை எல்லை.தன்ராஜ், நகர இளைஞரணி செயலாளர் கண்.இராமச்சந்திரன், காமலாபுரம் டைலர் முத்து, போச்சம்பள்ளி கருணாகரன், மாரவாடி அசோக், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.கி.வீரமணி, ச.கி.செம்மொழியரசு, சிவாடி சங்கர், கிருஷ்ணகிரி மாவட்ட பெரியார் பிஞ்சு சி.இனியன், காமலாபுரம் பெரியார் பிஞ்சு இரா.முத்தமிழ், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என திராவிடர் கழகம், விசிக, திமுக, கல்லூரி மாணவர்கள் என பெருந்திரளான தோழர்கள் பெரியார் நடையில் பங்கேற்று சிறப்பித்தனர்.
சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தவர்கள்:
அறிஞர் அண்ணா சிலைக்கு-மாவட்டத் தலைவர் பீம.தமிழ்பிரபாகரன்,
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு-கிகோவேந்தன் விசிக மாநில அமைப்புச் செயலாளர்,
காந்தி சிலைக்கு-விசிக மத்திய மாவட்டச் செயலாளர் த.கு.பாண்டியன்,
நேரு சிலைக்கு-மாவட்ட துணைத் தலைவர் எல்அய்சி மு.பரமசிவன்,
பெரியார் சிலைக்கு- மருத்துவர் பிகேஆர் கவுதமன் இயக்குனர் பெரியார் மருத்துவம் குழுமம், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் சிலைகளுக்கு மாலையணிவித்து சிறப்பித்தனர்.

பெரியார் நடை வழித்தடங்கள்:
பெரியார் நூற்றாண்டு நினைவுத் தூண், நான்கு ரோடு சந்திப்பு அறிஞர் அண்ணா சிலை, அண்ணல் அம்பேத்கர் சிலை, ஜி.எம். தியேட்டர் வழியாக, எஸ்.வி. சாலை வழியாக காந்தி சிலை, நேரு சிலை, இறுதியாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் முழக்கமிட்டு பெரியார் நடை நிறைவுற்றது.
இந்நிகழ்விற்கு மருத்துவப் பாதுகாப் புக்கு தேவையான அவசர சிகிச்சை வழங்கும் ஆம்புலன்ஸ், செவிலியர், முதலுதவி உபகரணங்கள் ஆகியவை வழங்கிச் சிறப்பித்தவர்கள்:
தருமபுரி தங்கம் மருத்துவமனை சிறுநீரக சிக்சசை மய்யம் சார்பில் மரு.வானதி செந்தில் மற்றும் கனி சில் சென்டர்(மில்கி மிஸ்ட்), மரு.கனிமொழி மதிக்கண்ணன்., அதியமான் அரண்மனை மரு.சுவாதி சத்தியபிரபு., வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி வி.மாதவன்., இயக்குநர் வி.வி.டி.டி. ஆகிய நிறுவனங்கள் பெரியார் நடைக்கு மருத்துவ உதவி செய்து தொண்டாற்றினர்.
பெரியார் நடையில் பங்கேற்ற அனை வருக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர்.தமிழ்ச்செல்வி, விசிக மாநில அமைப்புச் செயலாளர் கி.கோவேந்தன் சிறப்பாளர்களாக பெரியார் படம் பொருந்திய மெடலை அணிவித்தனர்.
பெரியார் நடையை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஒருங்கிணைத்தனர்.
பெரியார் நடையில் நகர இளைஞரணி கண்.இராமச்சந்திரன், இர.கிருஷ்ணமூர்த்தி, விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ம.சுதா ஆகியோர் இயக்க முழக்கங்களை இட்டு பெரியார் நடையை சிறப்படைய செய்தனர்.
