டில்லியில் நடைபெற்ற போராட்டம் நீதிமன்ற உத்தரவைமீறி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது ஏன்? அதிகாரிகள்மீது அவமதிப்பு நடவடிக்கை ஒன்றிய அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் தாக்கீது

புதுடில்லி, அக். 12-  நீதிமன்ற உத்தரவை மீறி டில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டது ஏன்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிகாரிகள் மீது ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் போராட்டங்களை ஒட்டி விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், கைது நடவடிக்கைகளுக்கு எதிரான மனுக்களை நீதிபதிகள் ஜாய் மால்யா பக்சி, வி. மோகனா அடங்கிய சிறப்பு அமர்வு விசாரித்தது. நீதிமன்ற உத் தரவை மீறி 45 மெட்ரோ நிலை யங்கள் மூடப்பட்ட தாகவும், இதற்காக ஒன்றிய உள்துறைச் செயலர், டில்லி காவல் ஆணையர், மெட்ரோ நிறு வனத் தலைவர் ஆகியோர் மீது அவ மதிப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு தாரர்கள் வலியுறுத்தினர்.

அமைதியாகப் போராடியவர்கள், வழக்குரைஞர்கள், கட்சித் தலை வர்கள், முன்னாள் முதலமைச் சர்களைக் காவல்துறை கைது செய் ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். “ஜனநாயக நாட்டில் அமைதியாகப் போராட உரிமை இல்லையா?” என்று கேட்ட அவர்கள், உச்சநீதி மன்றத்துக்கு வெளியேகூட 144 தடை உத்தரவு போடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.

இதற்குப் பதிலளித்த சொலி சிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கைது செய்யப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டதாகக் கூறினார். மெட்ரோ சேவை நிறுத்தப் படவில்லை், கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டது், தற்போது எல்லா நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவுகள்: எந்தெந்த வழித்தடங்களில் மெட்ரோ நிலைய ங்கள் மூடப்பட்டன என்பது குறித்து டெல்லி காவல்துறை வரைபடத்துடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதற்காக ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு ஒன்றிய உள்துறைச் செயலர், டெல்லி காவல் ஆணையர்.

டில்லி மெட்ரோ நிறுவனத் தலைவர் ஆகியோர் வரும் 13-ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அமைதி வழியில் கூடுபவர்களைச் சட்டவிரோதமாகக் கைது செய்யக் கூடாது. மெட்ரோ, ரயில் மற்றும் இணையச் சேவைகளைத் தடுக்காமல் பொதுமக்கள் நடமாட அனுமதிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் அருகே உள்ள தடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றனர்.

கால வரையற்ற போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று சிஜேபி வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அந்த அமைப்பு சார்பில் டில்லியில் 10.10.2026 அன்று காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட்டது. முதல் நாளில் 7,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இரண்டாவது நாளாக சிஜேபி சார்பில் டில்லியில் நேற்று (10.10.2026) போராட்டம் நீடித்தது. ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டக்காரர்களை நுழையவிடாமல் தடுக்க 6 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து டில்லியின் கன்னாட்பிளேஸ், அய்என்ஏ மார்க்கெட், மண்டி ஹவுஸ், படேல் சவுக், டால்ஸ்டாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிஜேபி போராட்டக்காரர்கள் குவிந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

டில்லி பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் இரு செய்தியாளர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட மோதலில் செய்தியாளர்களுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டன. கன்னாட்பிளேஸ் உள் ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர்

கைது செய்யப்பட்டு பேருந்து, வேன்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் பலருக்கு காயங்கள் ஏற்பட்டன. காவல்துறை தரப்பில் சிலர் காயமடைந்தனர். கன்னாட்பிளேஸ் பகுதியில் சிஜேபிக்கு ஆதரவாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் எம்பி ஜான் பிரிட்டாஸ் கைது செய்யப்பட்டு குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *