தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 30 ஆம் ஆண்டு விழா – திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் கவிஞர் கடவூர் மணிமாறன், கவிமாமணி வாணியம்பாடி அப்துல்காதர் ஆகியோருக்குப் பொன்னாடை அணிவித்து, ‘பெரியார் விருது’ வழங்கினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இவ்விழாவில் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் எழுதிய ‘தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி மனு’ புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட சட்டமன்ற காங்கிரஸ் மேனாள் உறுப்பினர் உ.பலராமன் பெற்றுக்கொண்டார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (சென்னை பெரியார் திடல், 17-1-2024).
திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் பெரியார் விருது – 2024
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
