மதுராந்தகம் இடைத்தேர்தல்! அஞ்சல் வாக்குகளில் அரசு ஊழியர்கள் தவெகவுக்கு எதிர்ப்பு! திமுகவுக்கே ஆதரவு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

செங்கல்பட்டு, அக்.11 மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில்  அதில் முதலில் எண்ணப்படும் அஞ்சல் வழி ஓட்டுக்களில் திமுக வேட்பாளர் பரந்தாமனுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது அரசு ஊழியர்கள் அதிகம் பேர் பயன்படுத்தும் அஞ்சல் வாக்குகள் தவெகவுக்கு நிறைய கிடைக்கவில்லை.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், மார்க்சிஸ்ட் சார்பில் சுகந்தி, நாதக சார்பில் ஜானகிராமன், சுயேச்சைகள் என மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மொத்தம் 86.26 சதவீதம் ஆகும். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் கொண்ட வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஆத்தூரில் உள்ள மய்யத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன. அஞ்சல் வாக்குகளில் திமுகவுக்கு 358, அதிமுகவுக்கு 322, தவெகவுக்கு 136 வாக்குகள் கிடைத்தன. அரசு ஊழியர்கள் அதிகம் ஓட்டுப் போடும் அஞ்சல் ஓட்டுகளிலேயே எதிர்க்கட்சியான திமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் தவெகவுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது தெரிகிறது. அஞ்சல் வாக்குகள் பெறும் பணிகள் கடந்த 28ஆம் தேதி தொடங்கியது. மதுராந்தகம் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவின் பேரில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழுவினர் 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் ஊனமுற்றோர், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் உள்பட 931 வாக் காளர்களிடம் அஞ்சல் தபால் வாக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் 893 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *