அரிசி, சர்க்கரை விலை ஏறவே இல்லையாம்.. விலைவாசி குறைவாகத்தான் இருக்காம்.. சொல்வது உணவுத்துறை அமைச்சர்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.11 “அரிசி, சர்க்கரை விலை உயரவில்லை. சராசரியாகவே உள்ளது. நான் தினமும் ஆய்வு செய்துதான் வருகிறேன். அதேபோல் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு என்பது தேர்தல் அரசியலுக்காக பரப்புவது” என தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரிசி மூட்டைக்கு ரூ.600 வரை அதிகரித்துள்ளது. விரைவில் ஒரு கிலோ அரிசி ரூ.100 வரை தொடும் என்று வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். அதேபோல பருப்பு, எண்ணெய், புளி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியவாசிய சமையல் பொருட்களின் விலையும் கடுமையாக ஏறியுள்ளது.

தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த 3 மாதங்களாகத் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சமையலுக்குப் பயன்படும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை அதிகரித்துள்ளது. அதேபோல், சமையல் எண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.45 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளும் தினசரி விலை உயர்வு என்ற அடிப்படையில் உயர்ந்து வருகின்றன. காய்கறி, சமையல் செலவுக்கே, முன்பை விட இரண்டு மடங்கு செலவு செய்ய வேண்டியுள்ளதாக பொதுமக்கள் குமுறுகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று (10.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அத்திவாசிய பொருட்கள் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் வெங்கடரமணன், “உணவுப்பொருள் தட்டுப்பாடு எங்குமே இல்லை. அது தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட பிம்பம். அரசியலுக்காக, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதாக பொய் பிம்பத்தை கட்டமைக்க நினைக்கிறார்கள்

விலைவாசி ஏற்றம் இல்லவே இல்லை. நான் தொடர்ந்து நாள்தோறும் ஆய்வு செய்து வருகிறேன். 61 அத்தியாவசியப் பொருட்களின் விலையை அரசு தினமும் கண்காணித்து வருகிறது. நேற்று கூட அரிசி விலை, சர்க்கரை விலை ஏறியதாகச் சொன்னார்கள். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. சில நாட்களில் 1 ரூபாய், 2 ரூபாய் விலை ஏறும், பிறகு சரியும். அதுதான் நடக்கிறது. செப்டம்பர் முதல் இங்கு உற்பத்தி குறைவாக இருக்கும். ஜனவரி முதல் உற்பத்தி அதிகரிக்கும். ஜனவரிக்குப் பிறகு சாகுபடி அதிகரிக்கும். எல்லா உணவுப் பொருளுமே தேவையான அளவுக்கு சேமித்து வைக்கப்பட்டு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *