தாய்மாமன் தங்க மோதிரம் பெற அலைக்கழிக்கப்படும் பெண்கள்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக்.11 ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தில், பிறந்த பச்சிளங்குழந்தைகளை துாக்கி வருமாறு,  பெண்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் த.வெ.க., அரசு பொறுப்பேற்றதும், அரசு மருத்துவமனைகளில் மகப்பேறுகளை  அதிகரிக்கும் வகையில், ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய், செப்., 28ம் தேதி தொடங்கி வைத்தாலும், ஜூன் 22ம் தேதி முதல் பிறந்த அனைத்து குழந்தைகளும் பயன் பெறுவர் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1.07 லட்சம் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட வேண்டும். தினசரி தலா, 100 என்ற எண்ணிக்கையில் மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. இதில், பிரசவித்த பெண்கள், பிறந்த குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: தங்க மோதிரம் பெற, குழந்தைகளை கட்டாயம் துாக்கி வர வேண்டும் என, அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். மருத்துவமனைக்கும், எங்களுக்கும், 30 – 40 கி.மீ., துாரம் உள்ளது. இந்த வெயிலில், பேருந்தில் குழந்தையை துாக்கி வந்தாலும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. அங்கு குழந்தைக்கு பால் கொடுக்க கூட வசதி இல்லை. அதனால், குழந்தைகளுடன் நேரில் வருவதை தவிர்த்து, அரசு மருத்துவமனையில் மகப்பேறு  பார்த்ததற்கான ஆவணங்கள் மற்றும் தகுதியானவர்களின் ஆவணங்களை சமர்ப்பித்தாலே, தங்க மோதிரம் வழங்க வேண்டும். அதற்கு அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தங்க மோதிரம் வழங்குவது காட்சிப் பதிவு செய்யப்படுவதால், குழந்தையையும் துாக்கி வர வேண்டும். சில மாதங்களுக்கு மட்டும் சிரமம் இருக்கும்’ என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *