சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0 அனுமதி மறுப்பு கைது நடவடிக்கையில் காவல்துறை

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

இந்தியா

புதுடில்லி, அக். 10-  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லியில் இன்று (10.10.2026) சிஜேபி சார்பில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தச் சூழலில் போராட்டத்துக்கு டில்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால், அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜந்தர் மந்தர் மற்றும் மத்திய டில்லி பகுதியை இணைக்கும் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் டில்லி காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தடுப்புகளை அமைத்து, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடம் ‘என்ன காரணத்துக்காக செல்கிறார்கள்?’ என விசாரித்த மேற்கொண்ட பிறகே அனுமதிக்கின்றனர்.

இத்தகைய நிலையில் அரசு ஊழியர்கள் தங்களிடம் உள்ள அடையாள அட்டையை காட்டிய பிறகு அந்தந்த பகுதிகளில் பயணிக்க காவல்துறையினர் அனுமதிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியில் இருந்து வரும் சாமானிய மக்கள், காவல்துறையினரின் கெடுபிடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய டெல்லி பகுதி ஸ்தம்பித்துள்ளது. இதோடு டில்லியின் எல்லைப் பகுதிகள், முக்கிய ரயில் நிலையங்கள், விமான நிலையத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பகுதி களில் இருந்து செல்ல முயலும் போராட்டக் காரர்களை தடுக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு என்று களத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

சிஜேபி ஜந்தர் மாந்தர் போராட்டம் 2.0

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டில்லியில் இன்று காலவரையற்ற போராட்டம் தொடங்கப்பட உள்ளது.

நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து சிஜேபி சார்பில் கடந்த ஜூன், ஜூலையில் டில்லி ஜந்தர் மந்தரில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதன்காரணமாக ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார். இந்த சூழலில் எஸ்அய்ஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அக்டோபர் 10-ஆம் தேதி முதல் டில்லியில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்படும் என்று சிஜேபி அறிவித்தது.

இதைத் தொடர்ந்து டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. டில்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 காவல்துறையினரும் மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 38,000 வீரர்கள் டில்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் 13 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கிழக்கு ரயில்வே நிர்வாகமும் சில விரைவு ரயில்களை ரத்து செய்திருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து டில்லிக்கு வரும் பேருந்துகள் தீவிரமாக கண்காணிக் கப்படுகின்றன. டில்லி மற்றும் புறநகர்ப் பகுதி விடுதிகள், உணவு விடுதிகளில் தங்கியிருப்போர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. டில்லியை ஒட்டிய அண்டை மாநிலங்களின் எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. டில்லியின் 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முழுமையாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்கும் சிஜேபி தொண்டர்களை தடுப்பு காவலில் வைக்க திருமண மண்டபங்கள், மைதானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. முன்வரிசை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையரினர் உடைகளில் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. சிஜேபி அமைப்பின் 10,000 நிர்வாகிகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டக்காரர்கள் கைது

டில்லியில் ஜந்தர் மந்தர் மற்றும் அந்த பகுதியை ஒட்டிய இடங்களில் காணப்படும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் காவல் துறையினர், அவர்களை கைது செய்தும் வருகின்றனர். பெண்கள் அதிகளவில் இந்த போராட் டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க் கப்படுகின்ற காரணத்தால் ‘பிங்க் மகளிர் காவல் படை’-யினரும் அங்கு குவிக்கப் பட்டுள்ளனர்.

துருவ் ராட்டி கைது

சிஜேபி போராட்டத்தில் யூடியூபர் துருவ ராட்டி பங்கேற்க வாய்ப்புள்ளது என்று கருதப்படும் நிலையில், குருகிராமில் அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை காவல்துறையினர் எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்ற தகவலும் கிடைக்கவில்லை. இதற்கு சிஜேபி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றை நபரை காக்க ஒன்றிய அரசு அதன் படை பலத்தை பயன் படுத்துகிறது. இதனால் டில்லி முடங்கி யுள்ளது என்று ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

சிஜேபி நிர்வாகிகள் கைது

டில்லியில் விமானத்தில் வைத்தே சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் கட்சி நிர்வாகிகள் சவுரவ் தாஸ், அஷோதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று டில்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக சிஜேபி அமைப்பு போராட்டம் நடத்தவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மும்பையிலிருந்து டில்லிக்கு வந்த விமானத்திலிருந்து பயணிகள் இறங்கும் முன்பே, மூவரையும் டில்லி காவல் துறையினர் கைது செய்தனர்

பெசன்ட் நகரில் அமைதியாக போராடியவர்கள் கைதுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை பெசன்ட் நகரில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்விற்கு தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களின் ஜனநாயக உரிமையான அமைதியான போராட்டங்களை ஒடுக்கும் வகையிலான இத்தகைய நடவடிக்கைகளை ஏற்க முடியாது என அவர் தமது கண்டனப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *