கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 148 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சமூகநீதி,சமத்துவத்திற்கான பெரியார் நடை (மினி மாரத்தான் போட்டி).
துவங்கும் இடம்: கரூர் லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு.
நாள்: 11-10-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி. வழித்தடங்கள் லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, பழைய பேருந்து நிலையம், ஜவகர் பஜார் கடைவீதி, பழைய திண்டுக்கல் ரோடு லட்சுமி ராம் திரையரங்கம், மக்கள் பாதை லைட் ரோஸ் கார்னர் வரை சென்று அடையும்.
தலைமை: ப. குமாரசாமி கரூர் மாவட்ட தலைவர் திராவிடர் கழகம்
வரவேற்புரை: மா. ஜெகநாதன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திராவிடர் கழகம்.
பெரியார் நடை துவக்கி வைப்பவர்: தி.க. சண்முகம் நிறுவனர் தலைவர் தோழர் களம். முன்னிலை, வே ராஜு மாவட்டக் காப்பாளர், ம. காளிமுத்து மாவட்ட செயலாளர், சே. அன்பு பொதுக்குழு உறுப்பினர், கட்டளை வைரவன் பொதுக்குழு உறுப்பினர், மு.க.ராஜசேகரன் மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர் திராவிடர் கழகம், சான்றிதழ் மற்றும் பதக்கம் பரிசுகள் வழங்குபவர் மருத்துவர் ஏ.எஸ்.அபுல் ஹாசன் ஏ ஆர் எஸ் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் கரூர், எஸ்.பி.குமார் கரூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் திமுக, என். மணிராஜ் திமுக மாநில சட்டத்துறை இணைச் செயலாளர், இரா. குடியரசு வழக்கறிஞர் துணைத் தலைவர் விடுதலை வாசகர் வட்டம், ஆகியோர் பரிசுகள் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கின்றனர்.
நன்றியுரை: சிலம்பம் கோ.சரவணன் (சிலம்பம் ஆசிரியர், கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் களம்).
நிகழ்ச்சி ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்
