சுங்கச்சாவடிகள் மூலம் நெடுஞ்சாலைகளில் கட்டணக் கொள்ளை! மதுரை உயர் நீதிமன்றம் கருத்து!

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, அக். 9- யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை என நினைத்து நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணக் கொள்ளை நடக்கிறது என மதுரை உயர்நீதி மன்றக் கிளை அதிர்ச்சி தெரிவித்தது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தது:-

நெல்லை-தூத்துக்குடி இடையிலான தேசிய நெடுஞ்சாலை யானது, அந்த வழியாகச் செல்லும் தாமிரபரணி ஆற்றைக் கடக்கிறது. வல்லநாடு அருகே இருவழியிலும் ரூ.25 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த 2012ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் அந்த பாலத்தில் 10 அடி நீளத்திற்கு கான்கிரீட் விரிசல் ஏற்பட்டு ஓட்டை விழுந்தது. பாலம் பலம் இழந்து உள்ளதால் எந்நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. தரமற்றதாக அது அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்தப் பாலத்தை இடித்து விட்டு புதிதாக பாலம் கட்டவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. எனவே பாலத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், “தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் அமைப்பது, சாலைகள் அமைப்பது, அவை பழுதடைவது என்பன வாடிக்கையாக ஒன்றாக உள்ளன. நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணக் கொள்ளையடிப்பது வாடிக்கையாகக் கொண்டு உள்ளீர்கள். உங்களை யாரும் கேள்வி கேட்கமுடியாது என்ற எண்ணத்தில் இதுபோன்று செயல்படுகிறீர்களா?” என அதிர்ச்சி தெரிவித்தனர். விசாரணை முடிவில், “இந்தப் பாலத்தை சீரமைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *