அடுத்து மாதம் தமிழ்நாட்டில் மின்வாரிய ஊழியர்கள்  வேலை நிறுத்தம்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 09- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலத் தலைவர் கண்ணன், பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் நேற்று (8.10.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 6 பகுதிகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அமல்படுத்தப்பட்டால் 200 யூனிட் மின்சாரம், விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். அதேபோல் பயன்படுத்த இருக்கும் மின்சாரத்திற்கும் முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். பணம் உள்ளவர்களுக்கே மின்சாரம் என்ற நிலை உருவாகும். இதனை கண்டித்து வருகிற 12, 13 மற்றும் 14 தேதிகளில் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பும், 15-ஆம் தேதி வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். வருகிற 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும். நவம்பர் முதல் வாரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *