குன்னம், ஆக.14 பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ‘ஆடி வெள்ளி’ கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் மேற்கொண்டு வந்த னர். இதன் ஒரு பகுதியாக, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தேரை கோயில் வளாகத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தாழ்வாகச் சென்று கொண்டிருந்த மின்கம்பி தேர் மீது உரசியதில், அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகிய இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும், ராமு என்பவர் படுகாயமடைந்து சிகிச் சைக்காக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகளின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்றும், தாழ்வான மின்அழுத்த கம்பியைச் சீர்செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
