பெண்கள் பாதுகாப்பிற்காக ஓட்டுநர்களின் பெயர், நிழற்படம் வாடகை வாகனங்களில் பொருத்த வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

புதுடில்லி அக். 09- பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாடகை வாகனங்களில் ஓட்டுநர்களின் பெயர், நிழற்படம் அடங்கிய பலகை இருப்பதை உறுதி செய்ய டில்லி காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டில்லி மற்றும் நாட்டின் தலைநகர் பகுதியில் அடுத்தடுத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, கே.வினோத் சந்திரன் அமர்வில் இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டில்லியில் உடனடியாக காவல்துறையின் ரோந்துப் பணியை அதிகரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்பாக கல்வி நிறுவனங்கள் மற்றும் குற்றச்செயல் அதிகம் நடைபெறக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கேப்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களை கட்டாயம் சரிபார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் பெயர், நிழற்படம் அடங்கிய பலகை பயணிகளுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும், அனுமதியின்றி செயல்படும் மதுபானக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக வாகனங்களை வேறு ஓட்டுநர்களிடம் ஒப்படைப்பதை தடுக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படாவிட்டால் டில்லி காவல் ஆணையர் மற்றும் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *