இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் கனடா எழுத்தாளர் ஆன் கார்சன்

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

ஸ்டாக்ஹோம், அக். 09- கனடா எழுத்தாளர் ஆன் கார்சனுக்கு (76) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் இருந்து 200 எழுத்தாளர்களின் பெயர்கள் இலக்கிய நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதில் இருந்து 20 பேரின் பெயர்கள் இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டன. அவர்களில் கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஆன்கார்சனுக்கு நேற்று (8.10.2026) இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நோபல் பரிசுக் கமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடா கவிஞர், எழுத்தாளர் ஆன் கார்சனின் எழுத்துகள் புதுமை, நகைச்சுவை நிறைந்தவையாக உள்ளன. தற்கால இலக்கியத்தில் அவர் புதிய பாணிகளை அறிமுகம் செய்துள்ளார். குறிப்பாக கவிதை, மொழி பெயர்ப்பில் அவரது பங்களிப்புகள் முக்கியத் துவம் வாய்ந்தவையாக உள்ளன. அவரது படைப் புகள் வாழ்வியல் தத்துவங் களை தெளிவாக விளக்குகின்றன.

பழங்கால கிரேக்க, லத்தீன் இலக்கியங்களை அவர் புதுமை பாணியில் உலகத்துக்கு சமர்ப்பித்து உள்ளார். அவரது படைப்புகளில் கவிதை, கதை, நாடக இலக்கியங்கள் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. பல்வேறு முக்கிய வார்த்தைகள் எவ்வாறு தோன்றின, அவற்றின் அர்த்தங்கள் என்ன என்பதை அவர் எடுத்துரைத்து உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1998-ஆம் ஆண்டில் “ஆட்டோபயோகிராபி ஆப் ரெட்” என்ற நாவலை எழுத்தாளர் ஆன் கார்சன் வெளியிட்டார். இந்த நாவல் அவரது மிகச் சிறந்த படைப்பாக போற்றப்படுகிறது. கிரேக்கத்தின் 10 பண்டைய கால தொகுப்புகளை அவர் மொழிமாற்றம் செய்திருக்கிறார். 20-க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார். அவரது ஒட்டுமொத்த படைப்புகளுக்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *