தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம்!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு
த.வெ.க. அரசு அளித்த உறுதிமொழியிலிருந்து விலகக் கூடாது!
மீண்டும் அவர்களைப் போராட்டத்துக்குத் தள்ளக் கூடாது!

தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு த.வெ.க. அரசு அளித்த உறுதிமொழியிலிருந்து விலகக் கூடாது. மீண்டும் அவர்களைப் போராட்டத்துக்குத் தள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நிரந்தரப் பணி, வேலைப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் சார்பில், கடந்த சில நாட்களுக்குமுன் சென்னையில் பட்டினிப் போராட்டம் மேற்கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் நெடுங்காலமாகப் போராடி வருகின்றனர்.

பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் என்ற அவர்களின் கோரிக்கை நியாயமானதே. அவற்றையெல்லாம் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி வழங்கியவர்கள், இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கும்போது, அவர்களிடம் அதனை வலியுறுத்துவது தானே இயற்கை.

ஏற்க முடியாதது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்!

அதற்காகப் போராடினால், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, இரவு நேரத்தில் கைது செய்ததும், காவல்துறையினரைக் கொண்டு அடக்குமுறையை ஏவியதையும் ஒருபோதும் ஏற்க முடியாதது மட்டுமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.

மக்கள் நலத்திற்கான பணிகளில், உயிர்காக்கும் பணிகளில் கடும் துயரங்களைப் பொருட்படுத்தாமல் பணியாற்றக் கூடியவர்களுக்கு உரிய தேவைகளை நிறைவு செய்வதும், அவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்குவதும் அவசியமாகும்.

செவிலியர்கள் போராட்டத்தை ஒடுக்கி, அவர்களது நம்பிக்கையைக் குலைக்கக் கூடாது. தற்போது அரசுத் தரப்பிலிருந்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவிலியர்களின் போராட்டம் நவம்பர் 3 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்!

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்துள்ள இந்த உறுதிமொழியிலிருந்து அரசு விலகக் கூடாது. மீண்டும் அவர்களைப் போராட்டத்துக்குத் தள்ளக் கூடாது என்று தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும், சுகாதாரத் துறை அமைச்சரையும் திராவிடர் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

9.10.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *