யுகோ வங்கி ஓபிசி நலச் சங்கச் சம்மேளனத்தின் சார்பில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கருத்தரங்கம் – பாட்னா (பீகார்)

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பாட்னா, அக்.8 யுகோ வங்கி ஓபிசி நல சங்க சம்மேளனத்தின் சார்பில், ஜாதிவாரி கணக்கெடுப்பு, கிரீமிலேயர் முறையை ஒழித்தல் மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை இணைத்தல் ஆகிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக, ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் 4 அக்டோபர் 2026 அன்று பீகார் தலைநகர் பாட்னாவில், வெற்றிகரமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தந்தை பெரியார் உள்ளிட்ட சமூக நீதித் தலைவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கருத்தரங்கில் பங்கேற்று பேசிய, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி ஜாதிவாரியான கணக்கெடுப்பில் துல்லியமான தரவுகள் இருப்பதன் அவசியம் குறித்தும், அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான கிரீமிலேயர் முறையை முற்றிலும் நீக்குவதற்கு ஆதரவளிக்கும் அரசியலமைப்புச் சட்ட விதிகளை எடுத்துக்காட்டியும், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக பேசினார்.

யூகோ வங்கி ஓபிசி நல சங்கத்தின் தலைவர் பி.பிரசாத் தலைமையில். பிரேம் பிரகாஷ், செயலாளர், வரவேற்புரை வழங்கினார். அமன் தீப், தலைவர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ரவிக்குமார், மாநிலத் தலைவர், நன்றியுரை வழங்கினார்.

நிகழ்ச்சியில், உபேந்திர குமார், (யூனியன் வங்கி), ரவீந்திர ராம் (யூனியன் வங்கி நல சங்க ஆலோசகர்) சந்திர பிரசாத் (எல்.அய்.சி.) ஆகியோர் உரையாற்றி, விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

துல்லியமான ஜாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்தும் ஒரு கோரிக்கை மனுவில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கையெழுத்திட்டனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் மற்றும் இந்திய பதிவாளர் ஜெனரல் & மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் ஆகியோரிடம் சமர்ப்பிப்பதற்காக அந்த மனு, கோ..கருணாநிதி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியா

கருத்தரங்கில் ஏராளமான ஓபிசி உறுப்பினர்கள் மற்றும் யூனியன் வங்கி, காப்பீட்டுத் துறை, ரிசர்வ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட தோழமை  அமைப்புகளின் பிரதிநிதிகளும் பெருமளவில் பங்கேற்றனர்.

பாட்னா நகரில் அனைத்து ஓபிசி தோழர்களிடம் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தரங்கமாகவும், தந்தை பெரியாரின் போராட்டத்தை தியாகத்தை நினைவு கூறும் நிகழ்வாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *