நாகையில் குடும்ப விழா – மருத்துவர் வைக்கம் மதி பங்கேற்று வாழ்த்து தொகுப்பு: நாகை நாத்திக.பொன்முடி

5 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

3.10.2026 அன்று காலை 9:30 மணிக்கு துவங்கி 4.15 மணி வரை சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகையில் நாகப்பட்டினம் மாவட்டக் கழக சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவிப்பிற்கிணங்க உலகத் தலைவர் தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மகிழ்வாக 2026 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் இறுதி வாரத்துக்குள் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் கொண்டாடி வருகின்ற இச்சூழலில்…

பெரியாரால் பயனடைந்தோம்

நாகப்பட்டினம் மாவட்டம் கொள்கை குடும்பங்கள் ஒன்று கூடுகை (குடும்ப விருந்து) விழாவை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நிகழ்வினை தொடங்கி வைத்து, நிகழ்வின் நோக்கங்கள் குறித்து பேசினார். மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் தேவ.நர்மதா நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.

9.30 மணிக்கு குலமாணிக்கம் நடராஜன், அய்யா எங்கள் பெரியாரே…. வாழி…. என்கிற கழகப் பாடலை உற்சாகத்துடன் பாடத் தொடங்கினார். திருமருகல் ஒன்றியச் செயலாளர் சு.இராஜ்மோகன்-ரம்யா ஆகியோர் குழந்தைகள் இரா.தமிழினி, இரா.யாழினி, பாடல் பாடினர்.

மாவட்ட மகளிரணிச் செயலாளர் கடம்பங்குடி
இரா.பேபி, “அப்ப பக்தி இருந்துச்சு, புத்தியில்லை.. இப்ப புத்தி இருக்கு பக்தி இல்லை. பெரியார் கொள்கையால் மகிழ்ச்சியாக வாழ்கின்றோம்” என பேசினார்.

முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் வாழ்குடி செல்வகுமார்-சுபா ஆகியோர் மகள் செ.பூவிழி, அவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500/467 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார் அவரை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், பாராட்டி சிறப்புச் செய்தார்.

திராவிடர் கழகம்

மருங்கூர் வி.ஆர்.(எ) வி.இராஜேந்திரன், மகன்கள்-மருமகள்கள் அறிவுமணி-இளமொழி, அஞ்சா நெஞ்சன்-சுஜிதா, மகள் மணிமொழி, எங்கள் ஊர் மருங்கூர் எங்கள் ஊருக்கு பெரியார் வந்துள்ளார் என்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது எனக் கூறினர். திருமருகல் ஒன்றியத் தலைவர் இராச.முருகையன்-ஹேமலதா, இருவருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

மாவட்ட மகளிரணித் தலைவர் ஆசிரியர் அலமேலு. பேசும்போது நான் ஆசிரியராக பணிபுரிந்தேன். என் இணையர் மின்சாரத் துறையில் பணிபுரிந்தவர். மகள் வெளிநாட்டில் உள்ளார். சின்ன மகள் கீழ்வேளூர் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிகிறார் இதற்கெல்லாம் காரணம் பெரியார் என்றார்.

சிற்றுண்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

“முரசொலிக்குது புறப்படு”… பாடலை ஜெயக்குமார் பாட இளமாறன், நர்மதா, ஆகியோர் பின்பாட்டுப் பாடினர்.

“போராட்டம் எங்கள் ரத்த ஓட்டம் இலட்சியத்தை காணாமல் ஓயமாட்டோம்”… பாடலை இளமாறன் பாட ஜெயக்குமார், நர்மதா, முருகையன், மற்றும் அனைத்துத் தோழர்களுக்கும் கையொலி எழுப்பி உற்சாகத்துடன் பாடினர்.

சிறப்பு விருந்தினர்

நிகழ்விற்கு உறுதுணையாக இருந்த இன்பா கிளினிக் உரிமையாளர். மருத்துவர் ஜெ.வைக்கம் மதி “பெரியார் கொள்கை குடும்பங்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் இந்த தருணத்தில் என் தந்தை ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபாலன் இல்லையே என்கின்ற ஏக்கம் இருக்கின்றது இருப்பினும் என் தந்தை இட்டுச்சென்ற பணியினை மருத்துவப் பணிவுடன் இப் பணியையும் என்னால் முடிந்த வரை செய்து கொண்டு வருகிறேன். இனியும் செய்வேன். நிகழ்விற்கு ஒத்துழைப்பாகவும் இருப்பேன். வாய்ப்பளித்த நாகப்பட்டினம் மாவட்டம் கழகப் பொறுப்பாளர்களுக்கு நன்றி பாராட்டுகள்” என்றார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து அனைத்து ஒன்றியப் பொறுப்பாளர்கள் சார்பாக கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா. ஜெயக் குமார், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராசு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு. இளமாறன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, ஆகியோர் திராவிடர் கழகத்தின் தேவையைப் பற்றியும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93 ஆண்டுகள் உழைப்புகள் பற்றியும். பேசினர்.

அனைவருக்கும் இறைச்சி, முட்டை, இனிப்புடன் உணவு வழங்கப்பட்டது.

மந்திரமா? தந்திரமா?

2.15 மணிக்கு திண்டுக்கல் ஈட்டி கணேசனின், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம். மூட நம்பிக்கை ஒழிப்பு, சாமியார்கள் ஏமாற்று வேலை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்ற பித்தலாட்டங்களை விளக்கி செய்முறை வடிவில் விளக்கி மந்திரம் இல்லை எல்லாம் தந்திரமே என செய்து காட்டினார்.

விளையாட்டு போட்டிகள்!

மாணவர்கள், மற்றும் பெரியவர்கள் பெண்களுக்கான போட்டி முதல் மூன்று பரிசுகள்.

திராவிடர் கழகம்

“பலூன் ஊதி உடைத்தல்”

(மாணவர்கள்)

அன்புச்செல்வன், (திருப்புகலூர்), விஷ்வா, (அழகிரி நகர் திருவாரூர்), நிரஞ்சன், (கடம்பங்குடி)

(பெண்கள்)

திவ்யா (மருங்கூர்), தமிழரசி (கோபுராஜபுரம்), மணிமொழி (மருங்கூர்)

பெண்கள் மற்றும் ஆண்களுக்கான “இசை நாற்காலி”

ஆண்கள்: ராஜ்மோகன் (திருச்சங்கட்டாங்குடி), அறிவுமணி (மருங்கூர்), உமாநாத் (கோபுராஜபுரம்)

பெண்கள்: பிரதிக்ஷா. (சோழங்கநல்லூர்), அருள்மொழி (திருவாரூர்), சதாஷினி (கொட்டாரக்குடி)

ஆடல்

தமிழினி, யாழினி, இருவரும் பெரியார் போல் வேடம் அணிந்து “கருப்பு நிறத்தில் தந்தை பெரியார்”… என்ற பாடலுக்கு நடனம் ஆடினர்.

பொன்.செல்வராசுவின் பேரன் அன்புச்செல்வன், பாடலுக்கு ஏற்ப சிலம்பாட்டம், ஆடி கராத்தே செய்தார். கடம்பங்குடி நிரஞ்சன். ட்ரம்ஸ் வாசித்து, அனைவரையும் வியக்க வைத்தார்.

ஒவ்வொரு போட்டியிலும் மூன்று இடங்கள் பிடித்த வெற்றியாளர்களுக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் மெடல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மருத்துவர்கள் ஜெ.வைக்கம் மதி மற்றும் மெர்லியா ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டி உரையாற்றினர்.

நம்மால் முடியாதது யாராலும் முடியாது. வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும். -தமிழர் தலைவர் அவர்களின் சொல்லுக்கு ஏற்ப நம் கொள்கை குடும்பங்கள் காலை முதல் மாலை வரை நேரம் கடந்ததே தெரியவில்லை என்று சொல்கின்ற அளவிற்கு ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் உள்ள பெரியார் பெருந் தொண்டர்களின், சுயமரியாதைச் சுடரொளிகளின் வரலாறுகளை தான் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார். மாவட்ட கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்டச் செயலாளர் ஜெ. பூபேஷ்குப்தா ஆகியோர் நிகழ்வின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார்கள்.

மாவட்ட இணைச் செயலாளர் ரெ.துரைசாமி, பொதுக் குழு உறுப்பினர் ந.கமலம், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் ப.காமராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் இரா.இராமலிங்கம், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, மாவட்ட மகளிரணித் தலைவர் பு.அலமேலு, மாவட்ட மகளிரணிச் செயலாளர் இரா.பேபி, மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர் த.ஜெயப்பிரியா, திருமருகல் ஒன்றியத் தலைவர் இராச.முருகையன், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் பாவா.ஜெயக்குமார், திருமருகல் ஒன்றியச் செயலாளர் சு.இராஜ்மோகன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் தங்க.கிருஷ்ணா, கீழ்வேளூர் நகரச் செயலாளர் ம.முத்துராஜா, திருமருகல் ஒன்றிய அமைப்பாளர் ப.செல்வகுமார், திருமருகல் ஒன்றிய இளைஞரணி செ.சண்முகம், திருமருகல் ஒன்றிய துணைத் தலைவர் சின்னதுரை, திருமருகல் ஒன்றிய மகளிர் பாசறைச் செயலாளர் இரா.ரம்யா.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர் செல்வம், காரைக்கால் மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.செந்தமிழன், காரைக்கால் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் லூயிஸ் பியர், மாவட்ட மகளிரணித் தலைவர் செ.சிறீதேவி.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டச் செயலாளர் கோ.பிளாட்டோ, பொதுக்குழு உறுப்பினர் இரா.மகேஸ்வரி, திருவாரூர் ஒன்றியத் தலைவர் க.கவுதமன், ஒன்றிய துணைத் தலைவர் இராஜேந்திரன், ஒன்றிய மகளிரணித் தலைவர் க. சரோஜா, ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

சோழங்கநல்லூர் வெள்ளை மாளிகை அரங்க உரிமையாளர் டாக்டர் இளங்கோவனுக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்பு செய்தார்.

மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.ஆர்.அறிவுமணி, அனைவருக்கும் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *