திருநெல்வேலியில், மேனாள் சட்டப்பேரவைத் தலைவரும், மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் அவர்களை, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் இரா.வேல்முருகன், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், பெரியார் பிஞ்சு வேல்முகில் ஆகியோர் சந்தித்து தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா மலரினை வழங்கினர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 93 அகவையிலும் ஓய்வின்றி உழைத்து வருவதையும், அவர்களது, பேச்சுக்கள், அறிக்கைகளை விடுதலையில் படித்து மகிழ்வதாகவும், நலமோடு அவர் வாழவேண்டுமெனத் தனது விருப்பத்தையும் தெரிவித்தார்.
