மும்பை, அக்.8 ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடித்து வரும் படம், ‘ராமாயணா’. நிதேஷ் திவாரி இயக்கும் இப் படத்தின் முதல் பாகம் முதலில் வெளியாக இருக்கிறது. 2 ஆம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்துக்காக மும்பை பிரேம் ஃபோகஸ் ஸ்டுடியோவில் மிகப்பெரிய செட் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வளாகத்துக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அரங்கு ஒன்றில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக தீ உடனடியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெரும் பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டது.
இத்தகவலை மேற்கிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.என்.திவாரி உறுதி செய்துள்ளார்.
அவர் கூறும்போது,
எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்!
‘‘சில நாட்களுக்கு முன்பு அருகிலுள்ள ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து அனைத்து தயாரிப்பாளர்களையும் தொடர்பு கொண்டு, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். இருப்பினும், கவனக்குறைவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கும் மற்ற படக்குழுவினருக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; இது போன்ற விபத்துகளை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.
