மேட்டூர், அக். 07- மேட்டூர் அணையின் நீர் இருப்பு கடந்த 28 நாட்களில் 20 சதவீதம் சரிவடைந் துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 28 நாட்களுக்குள் மட்டும் அணையின் மொத்த நீர் இருப்பு 20 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அணையின் நீர்வரத்து மற்றும் நீர்மட்டம் குறித்த நிலவரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
