புதுடில்லி, அக்.06 இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரப்பிரதேச வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர மறுஆய்வுப் பணிகளின் போது, முறையான வெளிப்படைத்தன்மை இல்லாமல் 16.18 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் களின் விவரங்கள் மறைக்கப் பட்டுள்ளதாக ‘ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வுத் தரவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
விசாரணையில் அம்பலம்
விதிகளின்படி, வாக்குச்சாவடி வாரியான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளின் பட்டியலை மாநில முதன்மைத் தேர்தல் அலுவலரின் இணையதளத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட வேண்டும். ஆனால், படிவம் 6-இன் கீழ் பெறப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர் சேர்ப்பு விண்ணப்பங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என இந்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆய்வின்படி, 71.38 லட்சம் சேர்ப்பு விண்ணப்பங்கள் மட்டுமே இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், இறுதிப் பட்டியலில் 84.3 லட்சம் வாக்காளர்கள் சேர்க் கப்பட்டுள்ளனர். விண்ணப்பித்த வர்களை விட 12.92 லட்சம் வாக் காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட் டுள்ளது சாத்தியமற்ற கணிதமாகும்.
வரைவுப் பட்டியல் வெளியிடப் படுவதற்கு முன்பே 16.18 லட்சம் பேர் படிவம் 6 மூலம் விண்ணப்பித்ததாகத் தேர்தல் ஆணையம் கூறினாலும், இவர்களின் விவரங்களோ அல்லது வாக்குச்சாவடி வாரியான பட்டியலோ எங்குமே பகிரப்படவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் நீக்கப்பட்ட வர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மீண்டும் சேர்க்கப்பட்ட விகிதம் 96.27% ஆக உள்ளது. இதற்கு மாறாக, மேற்கு வங்கத்தில் இதே மறுஆய்வு காலத்தில் இந்த விகிதம் 18.5% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும் பீதி, குழப்பம்
உத்தரப்பிரதேசத்தில் 2.89 கோடி பேர் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் மாநிலத் தில் பெரும் பீதி ஏற்பட்டது. இதனையடுத்து, இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தது 200 வாக்காளர்களைச் சேர்க்குமாறு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில பாஜக தலைவர் பங்கஜ் சவுத்ரி உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து உத்தரப்பிரதேச முதன்மைத் தேர்தல் அலுவலர் நவதீப் ரின்வாவிடம் விளக்கம் கேட்டபோது, அவர் முறையான பதிலளிக்க மறுத்து அழைப்பைத் துண்டித்ததுடன், தரவுகளில் எந்த முரண்பாடும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். டில்லி தேர்தல் ஆணையமும் இதுதொடர்பாக இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
சட்டப்பூர்வ வெளிப் படைத் தன்மை முற்றிலுமாக கேள் விக்குறியாகியுள்ள இந்த விவகாரம், வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்ட மன்றத் தேர்தல்களுக்கு முன்பாக தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
