அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து நிலையற்ற தன்மையுடன் காணப்படுகிறது. இது கடந்த 1-ஆம் தேதி வர்த்தகத்தில் 96.25 என்ற நிலையில் நிறைவடைந்து இருந்தது. இது நேறைய வர்த்தகத்தில் 96.20 என்ற நிலையில் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 96.31 வரை வீழ்ச்சியடைந்த ரூபாய் மதிப்பு இறுதியில் 96.30 என்ற நிலையில் முடிந்தது. இதன் மூலம் 5 காசுகள் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணிகளால் ரூபாய் மதிப்பு சரிந்ததாக அந்நிய செலவாணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
