சென்னை, அக். 06- தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மேம்படுத்தி வழங்குவதற்காக ரூ.1,773 கோடியில் உரிமைகள் (RIGHTS) எனும் திட்டம் 2022-ஆம் ஆண்டு முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
அதன்படி சமூக மறுவாழ்வுப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி, மாற்றுத் திற னாளிகளின் முழுமையான தரவுகளை உருவாக்கி அவர்களை சேவைகளுடன் இணைக்க வேண்டும். இந்நிலையில் 2024 அக்டோபர் 8-இல் நெடுஞ்சாலைத்துறை ஓர் அரசா ணையை வெளியிட்டது.
அதில், உரிமைகள் திட்டத்தில் சேமிப்பாக உள்ள ரூ.350 கோடியை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றிக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த விவகாரம் தற்போது வெளி யாகி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கைக்கு மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இது குறித்து நேத்ரோதயா அமைப்பின் நிறுவனர் சி.கோவிந்த கிருஷ்ணன், கடந்த மாதம் முதல மைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உரிமைகள் திட்டத்தின்படி மாற் றுத்திறனாளிகள் ஒவ்வொரு அலு வலகமாக அலையாமல் கிராம மற்றும் வட்டார அளவிலேயே நலத்திட்டங்கள் அவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால், களத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இத்துறையின் கீழ் 878 தொண்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ள நிலையில், வெறும் 14 நிறுவனங்களுக்கு மட்டுமே சமூக சேவை வழங்குநர் பணி தரப்பட்டுள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை.
கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி யிட்ட ஆர்டிஅய் பதிலின்படி, மாநில ஆணையரகம் மற்றும் மாவட்ட அளவில் பணியாற்றும் உரிமைகள் திட்ட ஒப்பந்தப் பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை ரூ.299 கோடி செலவாகியுள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். சமூகப் பதிவேடு கணக்கெடுப்பு கடந்த ஜூன் 17 நிலவரப்படி 2.28 கோடி குடும்பங்களில் 1.41 கோடி குடும்பங்களில் நடத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 20 நிலவரப்படி அனைத்து விதமான மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்ட 10 லட்சத்து 76,926 தனித்துவ அடையாள அட்டைகளில், 14 பிரிவுகளைச் சேர்ந்த வெறும் 61,312 பேருக்கு மட்டுமே அட்டைகள் வழங் கப்பட்டுள்ளன. எனவே, எந்தப் பலனும் அளிக்காத இந்த திட்டத்தை நிறுத்தி விட்டு புதிய திட்டங்களை அரசு அறிமுகப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
