திருப்பத்தூர், அக். 6- தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் முன்னிட்டு திருப்பத்தூர் நகரில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை அருகிலிருந்து திருப்பத்தூர் மாவட்டக் கழகம் தலைமையில் அனைத்துக் கட்சிகள் ஒருங்கிணைந்து மாபெரும் தந்தை பெரியார் பட ஊர்வலம் நடை பெற்றது.
இந்நிகழ்விற்கு மாவட்டக் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன் வரவேற்புரையாற்றினார்.
மாநில மகளிரணிப் பொருளாளர் எ.அகிலா, இரா. சுபாஷ் சந்திரபோஷ் (மண்டல செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள்), வ.கண்ணதாசன் (மாவட்டசெயலாளர் விடுதலைச் சிறுத்தைகள்), கணேஷ்மல் (காம ராஜர் அறக்கட்டளை தலைவர்), வெங்கடாசலம் (திருப்பத்தூர் ரோட்டரி சங்கத் தலைவர்), வெ.குமரவேல் (மேனாள் துணை வட்டாட்சியர்), வழக்குரைஞர் அ.சிநேகா, புரட்சிகர இளைஞர் முன்னணி இந்திராகாந்தி ஆகியோர் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். இதில் திராவிடர் கழகம், ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர இளைஞர் முன்னணி, ரோட்டரி சங்கப் பொறுப்பாளர்கள், கற்பிபயிலகம் மாணவர்கள், அனைத்துக் கழக அமைப்புகளை சார்ந்த பொறுப் பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக பங் கேற்றனர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.எ.சிற்றரசன் நன்றி யுரையாற்றினார்.
திருப்பத்தூர் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற தந்தை பெரியார் பட ஊர்வலம்
Leave a Comment
