திருநெல்வேலி, அக். 6- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா – சமூக நீதிக்கான பெரியார் நடைப்பயணம் இன்று (6.10.2026) காலை 7 மணிக்கு பாளை யங்கோட்டை தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கியது.
தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையுரையாற்றினார். காப்பாளர் இரா.காசி, மாவட்ட துணைத் தலைவர் மகேசு, மாவட்ட ப.க.செயலாளர் சு.திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் வாழ்த்து முழக்கத்துடன் தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகம் அருகில் நிறைவு பெற்ற சமூகநீதி நடையினை மாவட்ட கழகச் செயலாளர் இரா.வேல்முருகன் சிறப்புரையாற்றி முடித்து வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் மாரிகணேசு நன்றி கூறினார்.
நிகழ்வில் மாநில இளைஞர ணித் துணைச் செயலாளர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரபாண்டிய கட்ட பொம்மன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூரியா, தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாநகர ப.க.தலைவர் முரசொலி முகிலன், துணைத் தலைவர் சந்திப்பு நடராசன், வீரவநல்லூர் ச.பெரியார்பித்தன், பேராசிரியர் சோமசுந்தரம், தராசு சுப்ரமணியம், பெரியார் பிஞ்சு வேல்முகில், கலையரசன், வெயிலுமுத்து, தென்கலம் அய்யப்பன், மாரியப் பன், தாமஸ், பழ.கண்ணன், கா.முருகேசன், செல்வநாயகம், செந்தமிழ், மூலக்கரைப்பட்டி பி.குமார், சு.நச்சினார் கினியன், சிறீநாத், ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
