திருநெல்வேலியில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள்விழா-சமூகநீதி நடை!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

திருநெல்வேலி, அக். 6- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 148ஆம் பிறந்தநாள் விழா – சமூக நீதிக்கான பெரியார் நடைப்பயணம்  இன்று (6.10.2026) காலை 7 மணிக்கு பாளை யங்கோட்டை தந்தை பெரியார் சிலையிலிருந்து தொடங்கியது.

தந்தை பெரியார் சிலைக்கு மாலையணிவித்து மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையுரையாற்றினார். காப்பாளர் இரா.காசி, மாவட்ட துணைத் தலைவர் மகேசு, மாவட்ட ப.க.செயலாளர் சு.திருமாவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் வாழ்த்து முழக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகம் அருகில் நிறைவு பெற்ற சமூகநீதி நடையினை மாவட்ட கழகச் செயலாளர் இரா.வேல்முருகன் சிறப்புரையாற்றி முடித்து வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் மாரிகணேசு நன்றி கூறினார்.

நிகழ்வில் மாநில இளைஞர ணித் துணைச் செயலாளர் மு.தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வீரபாண்டிய கட்ட பொம்மன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் செ.சூரியா, தஞ்சாவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாநகர ப.க.தலைவர் முரசொலி முகிலன், துணைத் தலைவர் சந்திப்பு நடராசன், வீரவநல்லூர் ச.பெரியார்பித்தன், பேராசிரியர் சோமசுந்தரம், தராசு சுப்ரமணியம், பெரியார் பிஞ்சு வேல்முகில், கலையரசன், வெயிலுமுத்து, தென்கலம் அய்யப்பன், மாரியப் பன், தாமஸ், பழ.கண்ணன், கா.முருகேசன், செல்வநாயகம், செந்தமிழ், மூலக்கரைப்பட்டி பி.குமார், சு.நச்சினார் கினியன், சிறீநாத், ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *