பள்ளி வளாகத்தில் மாணவர்களின் அரசியல் கூச்சல்! விளக்கம் அளிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு 4 வாரம் கெடு!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மதுரை, அக். 6- பள்ளி மாணவர்கள் ஆளும் கட்சி பெயரை சொல்லி முழக்கம் எழுப்பியது தொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் டிவிகே (தவெக), டிவிகே என முழக்கம் எழுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாயின. அந்த காணொலியில், அமைச்சர் உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி அரசியல் கட்சியின் பெயரை முழக்கமிடச் செய்துள்ளனர்.
மாணவர்கள் அவ்வாறு முழக்கங்கள் எழுப்பியபோது, விழாவில் பங்கேற்றவர்கள் யாரும் அதைத் தடுக்க முன்வராதது அதிர்ச்சி அளிக்கிறது. கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் அரசியல் சார்ந்த முழக்கங்கள் எழுப்புவதை ஊக்குவிக்கக்கூடாது.
எனவே, கல்வி நிறுவனங்களில் கட்சி சார்ந்த அரசியல் நடவடிக்கைகளை தடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநில அளவிலான நிலையான செயல்பாட்டு நடைமுறையை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வு நேற்று விசாரித்து, மனுதாரரின் புகார் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் விசாரித்து, 4 வாரத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *